‘எஸ்.பி.பி-யுடன் டூயட் பாட ஆசை..!’’ வைக்கம் விஜயலட்சுமி

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் வெளிவந்த குக்கூ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பின்னணிப் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. இவரது குரலில்  'என்னமோ ஏதோ' படத்தில் இடம்பெற்ற 'புதிய உலகை' பாடல் வைக்கம் விஜயலட்சுமி மீதான தேடலை ரசிகர்களிடம் அதிகப்படுத்தியது.

வைக்கம் விஜயலட்சுமி

பிறவியிலேயே கண் பார்வையற்ற வைக்கம் விஜயலட்சுமி சில நாள்களுக்கு முன்புதான் ஆப்ரேஷன் மூலம் கண்பார்வை பெற்றுள்ளார். இவர் பாடல் பாடுவதில் மட்டுமன்றி வீணை இசைப்பதிலும் கைதேர்ந்தவர்.  இவர் வீணை வாசிப்பதில் உலகச் சாதனை படைத்தார். தற்போது இவரது திறமையைப் பாராட்டி அமெரிக்காவைச் சேர்ந்த உலகத் தமிழ் பல்கலைக்கழகம் இவருக்குக் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் வைக்கம் விஜயலட்சுமியிடம் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொண்டோம்.

''எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. கடவுளின் ஆசீர்வாதத்தால்தான் இந்த டாக்டர் பட்டம் கிடைத்திருக்கிறது. இதைக் கடவுளுக்கும், குரு, அம்மா, அப்பா எல்லோருக்கும் அர்ப்பணிக்கிறேன். திரைத்துறையிலிருந்தும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்'' என்றவரிடம், அவருக்குத் தமிழில் அதிக வாய்ப்புகள் கொடுத்த இமான் பற்றி கேட்டால், ''அவர் ரொம்ப ஸ்வீட், எப்போதும் காமெடி அடித்துக்கொண்டிருப்பார். அதுமட்டுமல்ல என்னிடம் மட்டும் மிமிக்ரி பண்ணுவார். பூனை, காக்கா மாதிரி சில சமயங்களில் என்னைப் போலவும் மிமிக்ரி செய்து சிரிக்கவைப்பார்’’ என்றவர், ’’இத்தனை பட்டங்கள் கிடைத்தாலும், எனக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியனுடன் டூயட் பாட வேண்டும் என்பது என் ஆசை'' எனத் தனது ஆசையை மலையாளம் கலந்த தமிழில் கூறினார் வைக்கம் விஜயலட்சுமி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!