பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் கைது

கேரள சினிமாத் துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பாலியல் துன்புறுத்தல் வழக்கில், இன்று நடிகர் திலீப் கேரளப் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

திலீப்


கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி படப்பிடிப்பை முடித்துவிட்டு தனது காரில் கொச்சியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த பிரபல நடிகையை, ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. நடிகை கொடுத்த புகாரின் பேரில் கார் ஓட்டுநர் உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பல்சர் சுனி, இந்தக் கடத்தலில் ஈடுபடுவதற்கு தங்களுக்கு 50 லட்ச ரூபாய் வரை பணம் தரப்பட்டது என வாக்குமூலம் கொடுத்திருந்தார்.

இந்த வழக்கில் கேரள நடிகர் திலீப்பிற்கு சம்பந்தம் இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. மேலும், நடிகையைக் கடத்தி துன்புறுத்திய வீடியோ காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு பிடிப்பட்ட பின்னர், இந்தச் சந்தேகம் வலுபெற்றது. தற்போது குற்றம் சாட்டப்பட்ட பல்சர் சுனி தந்த தகவல்படி நடிகர் திலீப்பைக் கைது செய்துள்ளனர் கேரளப் போலீஸார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!