'விஐபி - 2' படத்தில் 'பிக் பாஸ்' பிரபலம்..!

முதல் எபிசோட் வெளியானது முதல் இன்று வரை பிக் பாஸ்தான் 'டாக் ஆஃப் தி டவுன்'. அதில் ஜூலி, ஆரவ், ரைஸாவைத் தவிர மற்ற அனைவரும் திரைப் பிரபலங்கள். ஜூலிக்கு பெரிதாக அறிமுகம் தேவையில்லை. ஜல்லிக்கட்டில் போராடி வைரலான காரணத்தால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். மீதமுள்ள ஆரவ் மற்றும் ரைஸா வில்சனும் மாடல் என்று அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்குள் அறிமுகமானார்கள். இருவரும் பல விளம்பரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆரவ் சைத்தான் படத்தில் மட்டும் நடித்திருந்தார். 

பிக் பாஸ் ரைஸா

ரைஸாவை எடுத்துக்கொண்டால், சிறு வயதில் இருந்தே மீடியா மீது ஆர்வமாக இருந்திருக்கிறார். ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்ற இவர் 'மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்' என்ற விருதையும் பெற்றுள்ளார். தற்போது பிக் பாஸ் போட்டியில் விளையாடி வரும் இவர், தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் 'வேலையில்லா பட்டாதாரி - 2' படத்தில் கஜோலின் உதவியாளராக நடித்துள்ளார். அந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. அந்த ட்ரெயிலரில் கஜோல் இடம்பெற்ற(1.07) காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால் அவரின் அருகில் சில காட்சிகளில் இடம்பெற்ற ரைஸா வில்சனையும் காணலாம்.

வேலையில்லா  பட்டதாரி இரண்டாம் பாகத்தின் டிரெயிலர் இதோ! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!