வெளியிடப்பட்ட நேரம்: 20:05 (11/07/2017)

கடைசி தொடர்பு:15:08 (12/07/2017)

பாலாவுக்கு இளையராஜாவின் பர்த்டே சிம்பொனி! #HBDBala

பாலா

கமர்ஷியலுக்குள் உழண்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமாவை, யதார்த்த உலகுக்குள் அழைத்துச் சென்ற இயக்குநர் பாலாவிற்கு இன்று பிறந்தநாள். தாரை தப்பட்டை படத்திற்கு பிறகு தற்போது பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷை வைத்து  நாச்சியார் படத்தை எடுத்துவருகிறார். இந்தப் பட வேலைகளில் பிஸியாக இருக்கும் பாலா, படத்தின் பாடல்கள் சம்பந்தமாக இன்று இளையராஜாவை சந்திக்கச் சென்றார். அங்கு சென்றவருக்கு காத்திருந்தது ஒரு இசை வாழ்த்து.

பாலாவை பார்த்த இளையராஜா, ‘என்னய்யா... பிறந்த நாளாம்ல... வாழ்த்து சொல்லிடுவோமா?!’ என்று விசாரித்தபடி, தன் குழுவினருக்கு சமிக்ஞை கொடுத்திருக்கிறார். உடனே அவர்கள் பிறந்த நாள் இசை வாழ்த்தை இசைக்க, ராஜாவும் அவர்களோடு இணைந்து இசைத்திருக்கிறார். இதை எதிர்பார்க்காத பாலா, நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் அமைதியாக ராஜாவின் வாழ்த்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அந்தத் தருணங்கள் கீழே வீடியோவாக....