Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மணிரத்னம், சந்தோஷ் சிவன் கூட்டணியில் புதுப்படமா?

மணிரத்னம் தயாரித்து இயக்கிய திரைப்படம் 'காற்று வெளியிடை' .  இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக புதுமுக நாயகி அதிதி ராவ் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. 


தற்போது மணிரத்னம் தனது அடுத்த புராஜெக்ட்டுக்கு ரெடியாகி விட்டார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.  தில் ஹீரோவாக தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் அரவிந்த்சுவாமி நடிப்பார்கள் என்றும்;  மேலும்,  தளபதி, ரோஜா, ராவணன் படங்களில் மணிரத்னத்துடன் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் கைகோக்கிறார் என்றும் தகவல் வந்தது. 

mani ratnam


இதுபற்றி சந்தோஷ் சிவனிடம் கேட்டபோது , ''இதுபற்றி எதுவும் கூறமுடியாது, நான் வேறு வேலைகளில் பிஸியாக இருக்கிறேன்'' என்று கூறினார். மேலும் இதுபற்றி  அவருக்கு நெருங்கிய வட்டாரத்திடம் கேட்டபோது,  ''மணிரத்னம் தனது அடுத்தப் படத்தின் டிஸ்கஷனில்தான் இருக்கிறார். இன்னும் முடிவாகவில்லை. மேலும், அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை எதுவும் நிச்சயம் இல்லை'' என்று கூறினார்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement