வெளியிடப்பட்ட நேரம்: 04:41 (13/07/2017)

கடைசி தொடர்பு:08:25 (13/07/2017)

நயன்தாரா, த்ரிஷா வரிசையில் காஜலின் புதுமுடிவு!

காஜல் அகர்வாலின் கைவசம் தற்போது மூன்று படங்கள் இருக்கின்றன. அஜித்துடன் 'விவேகம்', விஜய்யுடன் 'மெர்சல்' மற்றும் ராணா டகுபதியுடன் தெலுங்கில் ' நானே ராஜூ நானே மந்திரி'  ஆகிய மூன்று படங்களின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார், காஜல்அகர்வால்.

காஜல் அகர்வால்

த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா போலவே இவரும் சீனியர் நடிகைதான். ஆனால் இதுவரை, அவர்களைப் போல கதாநாயகி முக்கியத்துவம் உள்ள படங்களில் காஜல் நடிக்கவில்லை. அதற்கான வாய்ப்பு, இயக்குநர் பி.வாசு மூலமாக அவரைத் தேடி வந்திருக்கிறது.

கதாநாயகி முக்கியத்துவம்கொண்ட கதை ஒன்றை பி.வாசு சமீபத்தில் காஜலுக்குச் சொல்லியிருக்கிறார். அவர் சொன்ன கதை பிடித்துவிட, உடனே யெஸ் சொல்லியிருக்கிறார் காஜல். தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் பி.வாசு, சென்னை திரும்பியதும் படத்துக்கான முதல்கட்ட வேலைகளைத் தொடங்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

கதாநாயகி சப்ஜெக்ட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசை காஜலுக்கு நீண்ட நாட்களாகவே இருக்கிறதாம். ஆனால், நல்ல படங்களுக்காகக் காத்திருந்திருக்கிறார். சமீபத்தில், 'குயின்' ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானது. பி.வாசு, காஜல் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த த்ரில்லர் படம்குறித்த கூடுதல் அறிவிப்புகள் ஆகஸ்ட்டில் வெளியாகும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க