Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பசு', 'குஜராத்', 'இந்துத்வா பார்வையில் இந்தியா'... இந்த வசனங்களால் ஒரு படத்துக்கு வந்த சிக்கல்!

பொருளாதார வல்லுநரான அமர்த்தியா சென் குறித்து 'தி ஆர்கியூமென்டேடிவ் இந்தியன்' என்ற ஆவணப்படத்தை சுமன் கோஷ் என்பவர் இயக்கியுள்ளார். இந்தப் படம், சமீபத்தில் சென்ஸார் போர்டுக்குச் சென்றது. இதில் பசு, குஜாரத், இந்து, இந்தியா, இந்துத்வா பார்வையில் இந்தியா போன்றவைகுறித்து பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

Amartya Sen


இந்நிலையில், படத்திலிருந்து பசு, குஜராத், இந்து, இந்தியா, இந்துத்வா பார்வையில் இந்தியா போன்ற வசனங்களை மியூட் (Mute) செய்ய வேண்டும் என்று சென்ஸார் போர்டு கூறியுள்ளது. குறிப்பாக, இந்த வசனங்களை மியூட் செய்தால்தான் படத்துக்கு U/A சான்றிதழ் வழங்க முடியும் என்றும் சென்சார் போர்டு கூறியுள்ளது.


இதனால், கடந்த 10-ம் தேதி வெளியாகவேண்டிய படம் ரிலீஸாகவில்லை. அமர்த்தியா சென்னின் மாணவர் மற்றும் பொருளாதாரப் பேராசிரியர் கெளசிக் பாசு ஆகியோரின் கலந்துரையாடலை மையமாக வைத்துதான் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, படத்திலி  ருந்து அந்த வசனங்களை மியூட் செய்யவோ அல்லது நீக்கவோ முடியாது என்று படத்தின் இயக்குநர் சுமன் கூறியுள்ளார். இதனால், படம் வெளியாவதில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement