Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'பிக் பாஸில் வையாபுரி எலிமினேட் ஆயிடுவாரு!’ -ஆடியோ பேச்சுக்கு மனைவி ஆனந்தியின் அதிரடி!

நாளுக்கு நாள் 'பிக் பாஸ்' பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்துகொண்டுதான் இருக்கிறது. பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட வையாபுரியைப் பற்றி அவரது மனைவியிடம் கேட்டபோது, ''அவர் இன்னும் பத்து நாள்களில் எலிமினேட் ஆகிவிடுவார். அவரே சொல்லியிருக்கிறார்'' என்று பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுபற்றி அவரிடம் பேசினோம். ''என் கணவர் 'பிக் பாஸ்' டைட்டிலை வென்று வருவார்'' என்று உறுதியாகக் கூறுகிறார்.

வையாபுரி

தற்போது, 'பிக் பாஸ்'  நிகழ்ச்சியில் 11 போட்டியாளர்கள் உள்ள நிலையில், நடிகை அனுயாவும் நடிகர் கஞ்சா கருப்பும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். 'பிக் பாஸ்' விதியை மீறியதற்காக நடிகர் பரணி வெளியேற்றப்பட்டிருக்கிறார். நிகழ்ச்சியில் நடப்பவையெல்லாம் 'ரேட்டிங்கை அதிகப்படுத்துவதற்காக நடக்கும் வியாபாரத் தந்திரம்' என்றெல்லாம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கின்றனர். 'கலாசாரத்தை கெடுக்கும் பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும்' என இந்து மக்கள் கட்சி உள்பட சில அமைப்புகள் களம் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளரான நடிகர் வையாபுரி பற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவா என்பவர், வையாபுரியை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அந்த அழைப்புக்கு அவர் மனைவி அளித்த பதில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் இருப்பது இதுதான்!

''ஹலோ வையாபுரி இருக்கிறாரா?''

''நீங்கள் ?''

''என் பெயர் சிவா, ஈரோட்டிலிருந்து கால் பண்றேன். அடுத்த மாசம் இங்க ஒரு கோயில் ஃபங்ஷன் இருக்கு...''

''அடுத்த மாசத்துல அவர் வந்துருவார். இப்போ அவர் விஜய் டிவி நடத்துற 'பிக் பாஸ்'  புரோக்ராம்ல இருக்கார்''

''ஓ...''

''அடுத்த மாசம் என்ன தேதியில் திருவிழா?

''தேதி இன்னும் கன்ஃபார்ம் ஆகலை. இருபது  இருபத்தி ஒண்ணு நடக்கும்னு நினைக்கிறேன்''.

''அதுக்குள்ள அவர் வந்துருவாரு. கண்டிப்பா வந்துருவாரு. நான் சொல்றேன். அவரையே கால் பண்ணச் சொல்றேன்'. உங்கள அவருக்குத் தெரியுமா?'' 

''இல்லை, ஃபிரெண்டுதான் நம்பர் கொடுத்தாரு. ஆக்சுவலா அவரு நிகழ்ச்சியெல்லாம் பண்ணிக் கொடுப்பாரு... அவர்கிட்ட கேட்டதுக்கு, அவர்தான் சாருக்கிட்ட பேசச் சொன்னாரு''.

'' இப்போ அவர்கிட்ட பேச முடியாது. ஒரு வாரமோ இரண்டு வாரமோ... அதுக்குள்ள எலிமினேட் ஆயிருவாரு. அப்படித்தான் சொல்லியிருக்காரு. ஏன்னா, மத்த வேலைகளைப் பார்க்கணும்ல... அதனால வந்துருவாரு.."

'' அப்படியா... சரிங்க மேடம்... அப்போ நான் ஒரு பத்து நாள்ல...''

" நீங்க, ஃபர்ஸ்ட் வீக் கூட கால் பண்ணுங்களேன். ஃபர்ஸ்ட் வீக் கூட வேண்டாம்.  இந்த மாசம் கடைசியில கூப்பிடுங்க.''

“ ஓகே மேடம். நன்றி!''

vaiyapuri

 

வையாபுரியின் மனைவி ஆனந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். “ பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். என் கணவர் வையாபுரிக்காகத்தான் தினமும் பார்க்கிறேன். அவர், பிக் பாஸ் டைட்டிலை வென்று காட்டுவார் என உறுதியாக நம்புகிறேன். அவர் வெற்றி பெற்றால் சந்தோஷம்... எங்களைத் தொடர்புகொள்ளாமல் பிரிந்திருப்பது இதுதான் முதல்முறை'' என்றவரிடம், வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் ஆடியோ குறித்து கேட்டோம். “ அதில் பேசியது நான்தான், போன் பண்ணியது யாருன்னே தெரியாது. தொடர்ந்து போன் பண்ணிட்டே இருக்கும்போது நம்மால் என்ன செய்ய முடியும். சிலர் பேசும்போது, ‘ வீட்டுல இருக்காரா...எப்ப வருவார்னு’ போன் பண்றாங்க... வேறு சிலர், இரவு வீட்டுக்கு வந்துருவாரான்னு கேட்கறாங்க....அதாவது தினமும் ஷூட்டிங் போய்ட்டு இரவு வீட்டுக்கு வந்துருவார்னு நினைச்சு போன் பண்றாங்க. அவர் எலிமினேட் ஆகிருவாருன்னு நான் எப்படிச் சொல்ல முடியும்? வீட்டு வேலை செய்யும்போது இப்படி போன் வருது. பேசறவங்க போனைக் கட் செய்யறதுக்காக இப்படிச் சொன்னேன். இதை அவங்க ரெக்கார்டு பண்ணுவாங்கன்னு எனக்குத் தெரியாது” என்றார் இயல்பாக. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement