Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சங்கமித்ரா' படத்தில் இணைந்த சுரேஷ் ..!

இயக்குநர் சுந்தர்.சி-யின் ட்ரீம் புராஜெக்ட், 'சங்கமித்ரா' திரைப்படம். எட்டாம் நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து, ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில், முதலில் கதாநாயகியாக நடிக்க ஸ்ருதிஹாசன் ஒப்பந்தமானார். 

சங்கமித்ரா

'சங்கமித்ரா' படத்தைத் தயாரிக்கும் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசனை நீக்கியது தயாரிப்பு நிறுவனம். மேலும், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த 70-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தியது படக்குழு. அதுமட்டுமன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் சிவப்புக் கம்பள வரவேற்பும் தரப்பட்டது. ஸ்ருதிஹாசனுக்குப் பதிலாக யார் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்விக்குப் பதில் தெரியாத நிலையில், பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.சுரேஷ், இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

R.k.suresh

இதுபற்றி அவரிடம் பேசியபோது, ''இந்தியாவில்  அதிக பொருள் செலவில் உருவாகும் 'சங்கமித்ரா' படத்தில் நடிப்பதற்காக என்னிடம் பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடிக்க நானும் ஆர்வமாக உள்ளேன். ஆனால், படத்தில் என் கேரக்டர் பற்றி எதுவும் சொல்லமுடியாது. கூடிய விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்'' என்றார் ஆர்.கே.சுரேஷ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement