Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"விஜய் சேதுபதியும் மாதவனும் என்னால்தான் சந்திப்பாங்க..!"- வரலட்சுமி

நேர்த்தியான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுக்கும் நடிகர் மாதவன், 'இறுதிச் சுற்று' படத்துக்குப் பிறகு, தமிழில் நடிக்கும் திரைப்படம் 'விக்ரம் வேதா'. புஷ்கர் காயத்ரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் மாதவன், விஜய் சேதுபதி நடித்திருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஜூலை 7-ம் தேதி வெளியாக வேண்டிய 'விக்ரம் வேதா' திரைப்படம், ஜிஎஸ்டி வரி பிரச்னை காரணமாகத் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

varalakshmi

'விக்ரம் வேதா' படத்தைப் பற்றி நடிகை வரலட்சுமி கூறியதாவது, ''இந்தப் படத்தில் நான் வட சென்னை பெண்ணாக நடித்துள்ளேன். இந்தப் படத்தில் மாதவனும் விஜய் சேதுபதியும் என்னால்தான் சந்திப்பார்கள். எனக்கு நடக்கும் ஒரு சம்பவம்தான் அவர்கள் சந்திக்கவே காரணமாக இருக்கும். ஒரு டஃப்பான கேரக்டரில் விக்ரம் வேதா படத்தில் நடித்து இருக்கிறேன். அந்தப் படம் ஒரு கதையுடன் மட்டும் பயணிக்காது, படத்தைச் சுற்றி இரண்டு மூன்று கதைகள் இருக்கும். படம் பார்க்கிறப்போ உங்களுக்குப் புரியும்'' என்றவர், 'நிபுணன்' படத்தைப் பற்றியும் சொன்னார்.

'' 'நிபுணன்' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கிறேன். எனக்கு இந்தப் படத்தில் ஆக்‌ஷன் சீன்ஸ் வேற இருக்கு. இப்படி, நான் நடிக்கும் அனைத்துப் படங்களிலும் என்னால் முடிந்த வித்தியாசத்தை, ரசிகர்களுக்குத் திரையில் கொடுக்கிறேன். இது கடவுளின் ஆசிர்வாதமாகப் பார்க்கிறேன். என் டைரக்டர்ஸ்தான் இதற்குக் காரணம்'' என்றார் வரலட்சுமி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close