"பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் பார்ப்பதே இல்லை!"- ஹிப்ஹாப் ஆதி

இயக்குநர் சுந்தர்.சி தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, நடித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் 'மீசைய முறுக்கு'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சுந்தர்.சி, ’இந்தப் படம் ஆதியின் பயோகிராபி படம்’ என்று கூறியிருந்தார். 

ஹிப் ஹாப் ஆதி


ஆதியின் பயோகிராபின்னா படத்தில் ஜல்லிக்கட்டு பற்றிய சம்பவங்கள் இருக்குமா எனப் பல கேள்விகளுடன் ஆதியிடம் பேசினோம்.''இந்தப் படம் என்னுடைய பயோகிராபினு சொல்ல முடியாது. இந்தக் கதை காலேஜ் ஸ்டூடன்ட் சம்பந்தப்பட்ட கதை. எல்லோருடைய கல்லூரி வாழ்க்கையிலும் இருக்கும் ஜாலியான விஷயங்கள் இந்தப் படத்தில் இருக்கும். ஜல்லிக்கட்டுக்கும் இந்தப் படத்துக்கும் துளியும் சம்பந்தம் இல்லை. என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நான் இயக்குவதன் மூலம், அதை மக்களுக்குச் சொல்ல முடியும். அதனால்நான் தொடர்ந்து படங்களை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். இந்தப் படம் வெற்றி அடைந்து மக்கள் என்னை ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொண்டால் தொடர்ந்து படத்தை இயக்கிக் கொண்டும் நடிப்பேன்'' என்றவரிடம்,

’ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஜூலியானாவை, ''நீங்கள் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் செய்தது தவறு'' என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரியும், ஆர்த்தியும் கூறினார்கள். அதற்கு உங்களின் கருத்து என்ன?’ என்று கேட்டோம். 
''நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஃபாலோ பண்ணாதனால எனக்கு என்னன்னு தெளிவாத் தெரியலை. எனக்குத் தெரிஞ்சிருந்தால் நான் ஈஸியா இதற்கு பதில் சொல்லியிருப்பேன். என் படம் விரைவில் ரிலீஸ் ஆகப்போறதுனால, என் பட வேலைகளில் மட்டும்தான் நான் கவனம் செலுத்திக்கொண்டு வருகிறேன். ஆனா, ஜூலியானாவைப் பற்றி வந்த சில மீம்ஸ் பார்த்தேன். மற்றபடி 'பிக் பாஸ்' பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!