விஜய் சேதுபதியின் 'கருப்பன்' பட மோஷன் போஸ்டர்..! | Karuppan movie Motion poster released

வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (13/07/2017)

கடைசி தொடர்பு:08:41 (14/07/2017)

விஜய் சேதுபதியின் 'கருப்பன்' பட மோஷன் போஸ்டர்..!

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பதாக இருந்தார். அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழு. படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் 'பலே வெள்ளையத் தேவா', ’பிருந்தாவனம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார். பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள ஊர்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தினர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கருப்பன்

தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கோடு மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது. மோஷன் போஸ்டரில் பின்னணியில் இமானின் பி.ஜி.எம் தெறிக்க விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளை மாட்டை வெறி கொண்டு அடக்குகிறார். 'விக்ரம் வேதா' படத்தைத் தொடர்ந்து கருப்பன் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

மோஷன் போஸ்டர் வீடியோ இதோ!