Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக் பாஸ்க்கே மாஸ் காட்டும் டிவி நிகழ்ச்சிகள்!

'பிக் பாஸ்' நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து ஒரே சச்சரவுகள், அதிர்ச்சிக் குரல்கள், முகநூல் பதிவுகள், கமல்ஹாசனே தரும் பேட்டி என பரபரப்பு கிளம்பியிருக்கிறது. பிக் பிரதர் ஷோவின் தம்பிதான் இந்த பிக் பாஸ் என்பதால், இது போல இன்னும் என்ன வகை ரியாலிட்டி ஷோ உள்ளது எனத் தேடினால், பிக் பாஸுக்கே பாஸு என்ற ரேஞ்சில் இருக்கிறது மற்ற நிகழ்ச்சிகள்!

தி பேச்சுலர்:

பிக் பாஸ்

ஏபிசி சேனலில் 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 'தி பேச்சலர்'. திருமணத்துக்கு வெயிட்டிங்கில் இருக்கும் ஒரு பேச்சுலர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவருடன் சில பெண்களைப் பழக வைப்பார்கள். க்ரூப் டேட், ஒன் ஆன் ஒன் டேட், டூ ஆன் ஒன் டேட் எனப் பல டேட்டிங்குகள் நடக்கும். இப்படிப் பழகிப்பழகி அதில் யார் யாரைப் பிடித்திருக்கிறதோ, அந்தப் பெண்களுக்கு ரோஜாப் பூவைக் கொடுக்க வேண்டும் அந்த பேச்சுலர். எந்தப் பெண்ணுக்கு ரோஜா கிடைக்கவில்லையோ அந்தப் பெண்ணுக்கு கெட் அவுட் சொல்லிவிடுவார்கள். இப்படியாகப் பல டேட்டிங்குகள், பல ரோஜாக்களுக்குப் பிறகு எந்தப் பெண் லாஸ்ட்ல ஃபர்ஸ்ட் வர்றாங்களோ அந்தப் பெண்தான் வின்னர். பிறகு அந்த பேச்சுலர் பையன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம், காதலிக்கலாம். இது படு ஹிட்டாகி 21 சீசன்கள் ஒளிப்பரப்பாகியிருக்கிறது. கூடவே 'தி பேச்சுலரேட்', 'பேச்சுலர் பேட்', 'பேச்சுலர் இன் பாரடைஸ்' என ஸ்பின் ஆஃப் தொடர்களும் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதே கான்செப்டைக் கொஞ்சம் உல்டாவாக மாற்றி இந்தியில் ராக்கி சாவந்தை வைத்து 'ராக்கி கா சுயம்வர்' என்ற பெயரில் எடுத்து பெரிய பரபரப்பைக் கிளப்பினார்கள்.

கீப்பிங் அப் வித் தி கர்தஷியன்ஸ்:

Kim Kardashiyan

க்ரிஸ் ஜேனர் தன் குடும்பத்துடன் டிவியில் தோன்றுவது குறித்த ஆர்வத்தைத் தெரிவிக்க தயாரிப்பாளர் ரியனுக்கு ஒரு யோசனை. சில நாள்களிலேயே 'கர்தஷியன் - ஜேன்னர் குடும்பம் பெயரிடப்படாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளப் போகிறது' எனத் அறிவித்தார். 2007 அக்டோபரில் இருந்து ஒளிப்பரப்பாகத் தொடங்கியது 'கீப்பிங் அப் வித் தி கர்தஷியன்ஸ்'. கர்தஷியன் - ஜேன்னர் வீட்டில் கேமரா வைத்து குடும்பத்தையே கேமரா கண்காணிப்புக்குள் நிறுத்தியது ஈ டிவி. 'பிரபலமாக என்ன வேணாலும் செய்வாங்க போல' என நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தாலும் ஷோ மட்டும் தெறி ஹிட்.

கேட்ஃபிஷ்:

Catfish

சிம்பிள் பாஸ். ஃபேக் ஐடில சேட் பண்ணுபவர்களை அலேக்கா தூக்கி மலேக்கா போடுறது. தனது சகோதரருக்கு நிகழ்ந்த ஃபேக்ஐடி அனுபவத்தைப் பற்றி கேள்விப்பட்டு அதை ஆவணப்படமாக எடுத்து அதற்கு கேட்ஃபிஷ் எனத் தலைப்பிடுகிறார் ஏரியல் ஸ்குல்மேன். அதை அப்படியே பிரித்துப்போட்டு டிவி நிகழ்ச்சிக்கான கான்செப்ட்டாக மாற்றியது எம் டிவி. இந்த நிகழ்ச்சியில் ஃபேக் ஐடியால் பாதிக்கப்பட்ட நெவ்வுக்கு, பார்வையாளர்களிடமிருந்து தான் சாட் செய்துகொண்டிருப்பது நிஜமான ஆளுடன்தானா? இல்லை, ஃபேக் ஐடியா எனக் கண்டுபிடித்துத்தரும்படி கோரிக்கை வரும். உடனடியாக நெவ் பார்வையாளரின் இடத்திற்கே சென்று, ஃபேக் ஐடியை கையும் கீபோடுமாகப் பிடித்துக் கொடுப்பார். இதுதான் ஒவ்வொரு எபிசோடும். இந்தப் போலி அக்கௌன்ட்டை காலிசெய்யும் ஷோ ஹிட்டடிக்க, தொடர்ந்து ஆறு சீசன்கள் நடத்தப்பட்டிருக்கின்றன.

லவ் ஐலண்ட்:

Love Island

இதுவும் கிட்டத்தட்ட பிக் பாஸ் போலதான். ஆனால், சின்னச்சின்ன மாற்றங்கள் இருக்கும். இதில் கலந்துகொள்ளும் நபர்களைத் தனித் தீவில் இருக்கும் வீட்டுக்குள் தங்கவைப்பார்கள். அங்கு இருக்கும் நபர்கள், தங்களுக்கான ஜோடியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். கடைசி வரை ஜோடியாக இருப்பவர்கள்தான் வெற்றிபெறுவார்கள். முதல் நாள் யாருடன் ஜோடி சேர்ந்தார்களோ, அவர்கள்தான் கடைசி வரை ஜோடியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால், சிங்கிளாக இருந்தால் அவர் வீட்டிலிருந்து (சிங்கிளா இருக்கறது ஒரு குத்தமாய்யா) வெளியேற்றப்படுவார். வெளியேற்றபடும் நபர் யார் என்பது ஆன் லைன் ஓட்டிங் மூலம் தீர்மானிக்கப்படும். இடையிடையே விளையாட்டுகள் நடத்துவது, அதில் வெற்றி பெரும் ஜோடிக்கு வெளியே டேட்டிங் அனுப்புவது என ஒரே கலாட்டாவாக இருக்கும். கூடவே இதில் எல்லோருக்கும் மொபைல் கொடுக்கப்படும். ஆனால், அதிலிருந்து உங்கள் இஷ்டத்துக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாது. அந்த வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு மெசேஜ் அனுப்பவும், உங்கள் கண்காணிப்பாளரிடமிருந்து தகவல் பெறவும் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது இதன் மூன்றாவது சீசன் ஐ டிவி 2-வில் ஒளிப்பரப்பாகிறது.

Naked and afraid

மார்ச் மாதத்திலிருந்து இந்த ஷோவின் ஏழாவது சீசன், டிஸ்கவரியில் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருக்கிறது. ஒரு ஜோடி, எந்த பர்சனல் பொருட்களையும் எடுத்துக் கொள்ளாமல் காட்டுக்குள் 21 நாள்கள் தங்க வேண்டும். அவர்களின் உரையாடல் கேட்பதற்காக மைக், ரிசீவர் மட்டும் சைடு பேகில் வைத்துக் கொடுக்கப்படும். அங்கு உணவு, தண்ணீர், நெருப்பு, தங்குமிடம் எல்லாம் அந்த இருவர்தான் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அவர்களைப் படம் பிடிக்க கேமரா குழு இருக்கும். ஆனால், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவரை யாரும் அவர்களை நெருங்கமாட்டார்கள். இரவு நேரத்தில் கேமரா குழு கிளம்பிவிடும் என்பதால், அவர்களிடமே ஒரு பர்சனல் கேமரா கொடுக்கப்படும். இந்த 21 நாள்களில் அவர்களின் ’சர்வைவா’ கணக்கிடப்படும். கடைசி நாளன்று ஹெலிகாப்டரோ, படகோ, காரோ அவர்களின் லொகேஷனைப் பொறுத்து ஒரு வாகனம் அனுப்பிவைக்கப்பட்டு, அழைத்துவரப்படுவார்கள். இந்த ஷோவுக்குப் பெயர், "நேக்டு அண்டு அஃப்ரைடு". ஆமா, பாஸ்... ஷேம் ஷேம் பப்பி ஷேம்!

இதுக்கே அசந்துட்டா எப்பிடி பிக் பாஸு, சுறா இருக்கும் டேங்க் மேல நின்னு பிசினஸ் பிரசன்டேஷன், உலகம் முழுக்கப் போகும் சைக்கிள் ரேஸ், முன்னப் பின்ன தெரியாத ஒருத்தரை முதல் சந்திப்பிலேயே சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழறதுனு வித விதமா ரக ரகமா மொரட்டு ரியாலிட்டி ஷோக்களும் இருக்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close