Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’கும்கி என்றாலே எனக்கு இதுதான் நினைவுக்கு வரும்...!’’- விருது பூரிப்பில் டி.இமான்

தமிழ் சினிமாவை வேறு ஓர் இடத்துக்குக் கொண்டு செல்வதில் முனைப்பாக உள்ளனர்  'டிக் டிக் டிக்' படக்குழுவினர். விரைவில் வெளியாகப் போகும் படத்தின் டீசர், படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் என்று படத்தின் இசையமைப்பாளர் இமான் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

D.imman


''இந்தப் படத்தை இந்த பட்ஜெட்டில் எடுப்பதே ஒரு பெரிய டாஸ்க். அதை திறமையாகக் கையாண்டுள்ளார் படத்தின் இயக்குநர் சக்தி. கண்டிப்பாக இந்தப் படத்தைப் பார்க்கும் ஆடியன்ஸ் ஒரு விண்வெளியில் இருப்பது போலவே உணர்வார்கள்'' என்று சொன்ன இமானிடம், 'கும்கி' படத்துக்குக் கிடைத்திருக்கும் தமிழக அரசு விருது பற்றி கேட்டால், ''எனக்கு மட்டும் இல்லை இந்தப் படத்தில் வேலைப்பார்த்த பலருக்கும் கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ' நீ எப்பபுள்ள' பாடலைப் பதிவு செய்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது. இந்தப் பாடலை அல்போன்ஸ் பாடினால் நன்றாகயிருக்கும் என்று பிரபு சாலமனிடம் சொன்னேன். 

அவருக்குக் கொஞ்சம் தயக்கம். ஏனென்றால் அல்போன்ஸ் வெஸ்டர்ன் டைப்பான பாடல் பாடுவதில்தான் கில்லி. அவருக்கு எப்படி ஒரு மண் மணம் சார்ந்த பாடல் சரியா வரும்னு பிரபு யோசித்தார். அல்போன்ஸ் இந்தப் பாட்டை பாட ஆரம்பிக்கும்போது பிரபு சாலமனும் பக்கத்தில்தான் இருந்தார். அல்போன்ஸ், சரியான தமிழ் உச்சரிப்புடன் பாடுவாரானு எனக்குள்ளே ஒரு சின்ன பயம் இருந்தது. ஏன்னா, பிரபு சாலமனும் நானும் தமிழ் உச்சரிப்பு சரியா இருக்கணும்னு நினைப்போம். ஆனால், அல்போன்ஸ் நினைத்ததைவிட ரொம்ப நல்ல உச்சரிப்புடன் பாடினார். அந்தப் பாட்டும் வெளியானவுடன் நல்ல ஹிட் ஆனது. கும்கி என்றாலே எனக்கு இந்த அனுபவம்தான் முதலில் நினைவுக்கு வரும்'' என்றார் இமான்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close