Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரூ.10 லட்சம் நஷ்டஈடு கேட்டு விஜய் சேதுபதிக்கு நோட்டீஸ்!

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் திரைப்படம் 'கருப்பன்'. கிஷோர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. வெளியானது முதலே ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.  


படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பையும் இந்த போஸ்டர் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, படத்தின்  இயக்குநர் பன்னீர் செல்வம் மற்றும் தயாரிப்பாளருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு  கேட்டு திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவைச் செயலாளர் காத்தான் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

''காளை பெயருக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில், 'கருப்பன்' படம் எடுத்துள்ளதாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி இயக்குநர் பன்னீர்செல்வத்திடம் பேசினோம். 'ஜல்லிக்கட்டுக்கு கடந்த ஐந்து வருடங்களாக போராடிக்கிட்டு வந்தார்கள். மாணவர் சக்தியால் ஜல்லிக்கட்டு சாத்தியமானது. படத்துடைய போஸ்டரில் ஜல்லிக்கட்டு இடம்பெற்றிருப்பதால் எல்லோருடைய பார்வையும் போஸ்டர் மேலயிருக்கு. நல்ல முறையில்தான் ஜல்லிக்கட்டுப் பற்றி படத்தில் பதிவு செய்திருக்கிறேன். தப்பாக எதுவும் சொல்லவில்லை. இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்\\ என்றார் இயக்குநர் பன்னீர்செல்வம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close