Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிவின் பாலியின் அடுத்த பட அப்டேட்ஸ்..!

மலையாளத்தில் ஹிட் அடித்த பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஜோமோன் T ஜான். இவரது ஒளிப்பதிவில் வெளிவந்த 'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா' உள்ளிட்ட படங்கள் இவரின் நேர்த்தியான ஒளிப்பதிவுக்குச் சான்றாகும். தற்போது இவர் மலையாளத்தில் நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு படம் இயக்கப்போகிறார்.

நிவின் பாலி

நிவின் பாலியின் படங்களான 'தட்டத்தின் மறயது', 'ஒரு வடக்கன் செல்பி' , 'ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' படங்களுக்கு ஜோமோன் T ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜான் எடுக்கப்போகும் இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிறது. படத்துக்கு 'கைரளி' என்று பெயரிட்டுள்ளனர். 

கைரளி

இந்தப் படம், 1979 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமான 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி’ பற்றியதாகும். இந்தப் படத்துக்கு திரைக்கதையை தேசிய விருதுப் பெற்ற சித்தார்தா சிவா எழுதவுள்ளார். மேலும், இந்தப் படத்தை நிவின் பாலியின் சொந்த நிறுவனமான ஜே.ஆர் பிக்சர்ஸூடன் சேர்ந்து ரியல் லைப் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஆரம்பிக்க உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளா, கோவா, டெல்லி  மட்டுமின்றி குவைத், ஜெர்மனி, ஜிபோட்டியிலும் நடக்க உள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close