இசைக் கச்சேரியிலிருந்து வட இந்தியர்கள் வெளியேறிய விவகாரம்..! ஏ.ஆர்.ரஹ்மான் பதில்

என் ரசிகர்கள் இல்லாமல் நான் இல்லை என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். 

a.r.rahman

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கடந்த வாரம் லண்டனில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். 'நேற்று, இன்று, நாளை' என்று பெயரிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த இசை நிகழ்ச்சியில், லண்டனில் வாழும் இந்தியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த இசை நிகழ்ச்சியை வட இந்தியர்கள் பாதியிலேயே புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அந்த நிகழ்ச்சியில், ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் பாடல்களே அதிகமாக பாடினார் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் ட்விட்டரில் ஏ.ஆர்.ரஹ்மான் அவமானப்படுத்திவிட்டார் என்பது போன்று கருத்துகள் பதிவிடப்பட்டது. இந்த விவகாரம் இந்திய அளவில் பெரும் விவாதப் பொருளானது. ஐ.ஐ.எஃப்.ஏ விருது விழாவில் பங்கேற்பதற்காக ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'எங்களால் முடிந்த அளவுக்கு சிறந்த பாடல்களை தர முயற்சி செய்கிறோம். நாங்கள் நேர்மையாக இருக்க முயற்சி செய்கிறோம். இத்தனை ஆண்டுகள் ரசிகர்கள் எனக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி. அவர்கள் இல்லை என்றால் நான் இல்லை. அவர்களுக்கு நான் நன்றிக் கடன்பட்டுள்ளேன்' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!