Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சத்யராஜ் மகள் பிரதமருக்குக் கடிதம்!

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜுக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திவ்யா பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

திவ்யா சத்தியராஜ்

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து மருத்துவராக உள்ளார். இவர், தற்போது சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் ஊட்டச்சத்து நிபுணராகப் பணியாற்றிவருகிறார். திவ்யா சத்யராஜ் சமீபத்தில் தமிழ் அகதிகளுக்காக இலவச மருத்துவ நேர்காணல் முகாம் ஒன்றை நடத்தினார்.

இந்த மருத்துவ முகாம் நடந்து முடிந்த சில நாள்களில், திவ்யா சத்யராஜை சில வெளிநாட்டு நிறுவனங்கள் தொடர்புகொண்டுள்ளனர். அந்த வெளிநாட்டு நிறுவனங்கள், திவ்யா சத்யராஜிடம் தவறான சில மருந்துகளை முகாம்களில் பயன்படுத்துமாறு அவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளனர். இதை மறுத்த திவ்யாவுக்கு, அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து திவ்யா சத்யராஜ், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நீட் தேர்வு முறையும் அதன் விளைவுகள்குறித்தும், அபாயகரமான மருந்துகள் நாட்டில் தடைசெய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close