Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிவின் பாலி படத்தின் போஸ்டர் வெளியீடு!

மலையாளம், தமிழ் என பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகர் நிவின் பாலி. இவர், தமிழில் நடித்திருக்கும் 'ரிச்சி' விரைவில் வெளியாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் நிவின் நடிக்கும் தமிழ்ப் படத்துக்கும் சமீபத்தில் பூஜை போடப்பட்டது.

நிவின்

அல்தாஃப் சலீம் இயக்கத்தில் 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா' படத்தில் நடித்து முடித்திருக்கிறார் நிவின். இந்தப் படம் முன்பே ரிலீஸ் ஆகவேண்டியிருந்து பின்பு தள்ளிப் போடப்பட்டது. தற்போது, படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. இந்த வருட ஓணத்துக்கு படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மலையாளத்தில் த்ரிஷாவுடன் 'ஹேய் ஜூட்' நயன்தாராவுடன் 'லவ் ஆக்‌ஷன் ட்ராமா' போன்ற படங்களிலும், இந்தி - மலையாளத்தில் பைலிங்குவலாக உருவாகும் 'மூத்தோன்' படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். ஜோமோன் டி ஜான் இயக்கும் 'கைரளி' படத்திலும் நடிக்க இருக்கிறார். இதோடு சேர்த்து, ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் மலையாளப் படத்திலும், ரமணா மல்லம் இயக்கத்தில் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் நிவின் பாலி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close