டிக் டிக் டிக் படத்தின் அசத்தல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மிருதன் படத்தின் மூலமாக மக்களைக் கவர்ந்த இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன், அடுத்ததாக இயக்கும் டிக் டிக் டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Tik tik tik

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். அதுவரை ஹாலிவுட்டை கலக்கிக் கொண்டிருந்த ஸோம்பி கான்செப்ட்டை, மிருதன் படம் மூலமாக தமிழ்த் திரைப்பட உலகுக்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சக்தி சவுந்தர்ராஜன். அது நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்நிலையில் இந்தியாவின் முதல் விண்வெளிப் படம் என்ற அறிவிப்போடு வெளியாகியுள்ளது டிக் டிக் டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். விண்வெளி வீரர்களின் உடையில் ஜெயம் ரவி இருக்கும் இந்தப் படம் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது,
'டிக் டிக் டிக் படத்தின் டீசரைப் பார்த்தேன் அருமையான கான்செப்ட்டாக இருந்தது, பூமியின் வெளியே இருப்பதைப் போன்று உணர்ந்தேன்' என இசையமைப்பாளர் டி.இமான் ஏற்கெனவே ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அந்தப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!