திருப்பதி கோவிலில் அஜித் திடீர் தரிசனம்..! | Actor Ajith visits Tirupati temple

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (18/07/2017)

கடைசி தொடர்பு:13:31 (18/07/2017)

திருப்பதி கோவிலில் அஜித் திடீர் தரிசனம்..!

அஜித் தனது 57-வது படமான 'விவேகம்' படத்தில் தற்போதுதான் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அஜித்தை இன்டர்நேஷனல் ஹீரோவாக பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். மேலும், இயக்குநர் சிவா கூட்டணியில் அஜித் நடித்த 'வீரம்' மற்றும் 'வேதாளம்' படங்கள் ஏற்கெனவே ஹிட் அடித்ததால், இவர்களின் கூட்டணியில் மூன்றாவதாக உருவான  'விவேகம்' படமும் ஹிட் அடிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

அஜித்

மேலும், இந்தப் படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். தமிழில் முதல் முறையாக இந்தப் படத்தின் மூலமாக கமலின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் அறிமுகமாகிறார். 150 நாள்களுக்கு மேலாக 'விவேகம்' படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்திருக்கும் நிலையில், அஜித் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்று, நேற்று நடந்த சுப்ரபாத சேவையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.  திருப்பதி கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வரும்போது, ரசிகர்கள் சிலர் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

இந்தத் தகவல் ஆந்திர ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகி இருக்கிறது. தனது ஒவ்வொரு படத்தின் வேலைகள் முடிந்தப்பின்பும் திருப்பதிக்கு சென்று தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ள அஜித், 'விவேகம்' படத்தின் வேலைகளை முடித்துவிட்டு திருப்பதி கோயிலுக்குச் சென்றதாக சிலர் கூறுகின்றனர். 

வீடியோவைக் காண கீழே இருக்கும் படத்தைக் க்ளிக் செய்யவும்...

...

நீங்க எப்படி பீல் பண்றீங்க