'பிடித்தவர்களுடன் பேச முடியவில்லை!' - ட்விட்டருக்கு குட்பை சொன்ன நடிகை குஷ்பு | Actress Khushboo says goodbye to Twitter

வெளியிடப்பட்ட நேரம்: 16:11 (18/07/2017)

கடைசி தொடர்பு:16:18 (18/07/2017)

'பிடித்தவர்களுடன் பேச முடியவில்லை!' - ட்விட்டருக்கு குட்பை சொன்ன நடிகை குஷ்பு

சமூக வலைதளங்களில் கருத்து சொல்வதில் முதன்மையானவர், நடிகை குஷ்பு. காங்கிரஸ் தொடர்பான கேள்விகளாக இருந்தாலும் சரி, நடிகர் சங்கம் தொடர்பான விவாதமாக இருந்தாலும் சரி, எந்த இடத்திலும் தன்னுடைய நிலைப்பாட்டை அவர் விட்டுக்கொடுத்ததில்லை. ட்விட்டரில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 985k-வைத் தாண்டியுள்ளது. அப்படிப்பட்டவர், இன்று 'ட்விட்டரில் இருந்து வெளியேறுவதாக' அறிவித்திருக்கிறார். 

குஷ்பு

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளர் குஷ்புவிடம் பேசினோம். "காலையில் எழுந்தவுடன் ட்விட்டரில் என்ன வந்துள்ளது, என்ன கருத்து பதிவுசெய்யலாம், உலகில் என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்க, செல்போனில் ட்விட்டரைத்தான் பார்க்கிறேன். காலப்போக்கில் ஏதோ ட்விட்டருக்கு அடிமையாவதைப் போல தோன்றியது. தூங்கி எழுந்திருக்கும்போதே, செல்போனைத்தான் கை தேடுகிறது. இதனாலேயே, ட்விட்டரிலிருந்து வெளியேறலாம் என்று முடிவுசெய்தேன்'' என்றவர், " கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வருவேன். ட்விட்டர் என்னை அடிமையாக்குகிறது. நேரமும் விரயமாகுது. பிடித்தவர்களிடம் பேச முடியவில்லை. தொடக்க காலங்களில் புத்தகம் படிப்பதுதான் எனது பொழுதுபோக்கு. திரும்பவும் நிறையப் புத்தகங்கள் படிக்கத் திட்டமிட்டுள்ளேன். தவிர, சமூக வலைதளங்களில் மட்டும்தான் நமது கருத்தைச் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் நம்முடைய கருத்தைச் சொல்லலாம். என்னுடைய கருத்துக்கு எதிர்க் கருத்தை எங்கிருந்து வேண்டுமானாலும் சொல்லலாம். ட்விட்டருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார் உறுதியாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க