வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (19/07/2017)

கடைசி தொடர்பு:13:50 (19/07/2017)

'சங்கமித்ரா' கேரக்டருக்காக ஹன்சிகாவுக்கு போட்டோஷூட் & மேக்கப்டெஸ்ட்..!

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்ட படமாக வெளிவரவிருக்கும் திரைப்படம் 'சங்கமித்ரா'. சரித்திரகால சப்ஜெக்ட் என்பதால் சென்னையிலும், ஹைதராபத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியிலும் பிரமாண்டமான அரசர்கால அரண்மனை, அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று கோடிக்கணக்கான பொருட்செலவில் பிரமாண்ட செட் போட்டு வருகின்றனர். முதலில் ஹீரோ விஜய் என்று சொல்லி அவரது கால்ஷீட் தேதிகளை வாங்கி வைத்திருந்தனர். அந்த கால்ஷீட்டை அப்படியே 'மெர்சல்' படத்துக்காக அள்ளிக்கொண்டு போய்விட்டார் அட்லி. அடுத்து சூர்யா என்று சொன்னார்கள். அவர் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் படுபிஸியாக இருப்பதாகச் சொல்லி தவிர்த்துவிட்டனர். அதன்பின் அக்கடபூமியைச் சேர்ந்த மகேஷ்பாபுவை அனுகியபோது அவரும் ஏனோ கைவிரித்துவிட்டார். 

சங்கமித்ரா,ஹன்சிகா,ஸ்ருதி ஹாசன்

இப்போது ஜெயம்ரவி, ஆர்யா நடிப்பதாக அறிவித்து இருக்கிறார், சுந்தர்.சி. கதாநாயகர்கள் கதைதான் இப்படி என்று நினைத்து நடிகை ஸ்ருதிஹாசனை 'சங்கமித்ரா' வேடத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தனர். வெளிநாட்டுக்குச் சென்று 'சங்கமித்ரா' படத்துக்கான புரொமோஷன்களில் எல்லாம் கலந்துகொண்டார், ஸ்ருதிஹாசன். ஒரு கட்டத்தில் 'சங்கமித்ரா' படக்கதையை ஸ்ருதிஹாசன் டங் ஸ்லிப்பாகி உளறிவிட அம்புடுதேன், பட யூனிட்டே பதைபதைத்துப்போனது. அதன்பின் 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதியை  நீக்கினார்களா, இல்லை ஸ்ருதிஹாசன் தானே விலகிக்கொண்டாரா? என்பது இன்றுவரை  புரியாத புதிர். ஒருபக்கம் தெலுங்கில் வெளியான 'ஶ்ரீ ராமராஜ்யம்' படத்தில் சீதா வேடத்தில் நடித்த நயன்தாரா கேரக்டர் அனைவராலும் பெரிதாகப் பேசப்பட்டது. அதனால், சங்கமித்ரா' வேடத்துக்கு நயன்தாராவை அணுகி இருக்கின்றனர். இன்னொரு பக்கம்  இந்தி நடிகை தீபிகா படுகோனிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் ஹன்சிகா மோத்வானியை 'சங்கமித்ரா' கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறார்கள். 'சங்கமித்ரா' கதாபாத்திரம் கனமானது, அவரைச் சுற்றியே திரைக்கதை பின்னப்பட்டு இருப்பதால் ஹன்சிகாவும் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கின்றாராம். சமீபத்தில் பின்னிமில்லில் பெரிய செட்போட்டு 'சங்கமித்ரா' மகாராணி கெட்டப்பில் ஹன்சிகாவுக்கு விதவிதமான நகைகள், ராணிகள் அணியும் விலையுயர்ந்த ஆடைகள் எல்லாம் அணிந்து ஹன்சிகாவை வைத்து போட்டோ ஷூட் ப்ளஸ் மேக்கப் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள். குட்டி குஷ்பு என்று அழைக்கப்படும் ஹன்சிகாவை, ஏற்கெனவே 'தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘ஆம்பள’, 'அரண்மனை 1 & 2' என தன் படங்களில் நடிக்க வைத்திருப்பதால் சுந்தர்.சி-யும் சுறுசுறுப்பாகக் களம் இறங்கி இருக்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க