Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’’என்னுடைய ஓட்டு ஓவியாவுக்குத்தான்..!’’ - நடிகை கஸ்தூரி

கடந்த 20 நாள்களாக பிக் பாஸ்தான் இணையத்தில் ஹாட் டாப்பிக். ஜூலி, காயத்ரி, ஓவியா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, பரணி, சினேகன் என பிக் பாஸ்  பிரபலங்கள் அனைவரும் மீம் மெட்டீரியல் ஆகியிருக்கிறார்கள். அனைவரும் பிக் பாஸ் பற்றி கருத்துக்கூறிவரும் நிலையில், நடிகை கஸ்தூரி பிக் பாஸ் பற்றி என்ன நினைக்கிறார் என தெரிந்துகொள்ள அவரைத் தொடர்புகொண்டோம்.

kasturi

"கடந்த ஆறு மாதமாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்னைத் அழைத்தார்கள். நான் அமெரிக்காவில் இருக்கும்போதே பலமுறை அழைப்பு வந்தது. ' நான் பிள்ளைக் குட்டிக்காரி... வரமாட்டேன்' என்று சொல்லிவிட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களில் ஓவியாவையும் கணேஷ் வெங்கட்ராமையும்தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. என்னுடைய ஓட்டும் ஓவியாவுக்குத்தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை அவமதிக்கலாமா என பலர் கொந்தளித்தார்கள். நான் அமெரிக்காவில் இருந்து சென்னை வந்ததுக்கு காரணமே என் பையன் தமிழ் கற்க வேண்டும் என்பதால்தான். என்னைப் பொறுத்தவரை, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முயற்சி செய்ததையே நான் பெருமையாகத்தான் பார்க்கிறேன். தேசிய கீதத்தை இப்படித்தான் பாட வேண்டும் என ரூல்ஸ் கொண்டுவந்தார்கள். அதனால்தான், பலரால் தேசிய கீதத்தை ஒழுங்காகப் பாட முடிவதில்லை'' என இயல்பாகப் பேசி முடித்தார் கஸ்தூரி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close