''கும்கி 2' படத்தில் இமானுக்குப் பதில் இவரா..!? | Iman or who in kumki 2 ?

வெளியிடப்பட்ட நேரம்: 17:03 (20/07/2017)

கடைசி தொடர்பு:17:03 (20/07/2017)

''கும்கி 2' படத்தில் இமானுக்குப் பதில் இவரா..!?

விக்ரம் பிரபு , லட்சுமி மேனன் இருவரையும் 'கும்கி' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன். இவரது 'கும்கி' படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்துக்கு திரைக்கதை ஒரு பலம் என்றால், இசை இன்னொரு பலமாக இருந்தது. டி.இமானின் இசை பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்தது. இந்த நிலையில், தற்போது 'கும்கி 2' படத்தை இயக்குவதில் முனைப்பாகயிருக்கிறார் பிரபுசாலமன். அந்தப் படத்துக்காகப் புதுமுகங்களைத் தேடிக் கொண்டிருந்த நிலையில், 'இதுதாண்டா போலீஸ்' படத்தில் நடித்த ராஜசேகர் - ஜீவிதா தம்பதியின் மகளான ஷிவானி நடிக்கிறார் என்று முதலில் கூறப்பட்டது. அதனால், இதுபற்றி ஷிவானியின் அம்மா ஜீவிதாவிடம் கேட்டபோது, 'பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்றது, எதுவும் முடிவாகவில்லை' என்று கூறினார்.

kumki 2

 

இயக்குநர் பிரபு சாலமனிடம்,  'கும்கி 2' படத்தில் இசையமைப்பாளர் இமான் இருப்பாரா' என்று கேட்டதற்கு, 'படத்தில் எல்லாமே புதுசுதான்' என்று மறைமுகமாக கூறினார். தற்போது இந்தப் படத்தில் இசையமைப்பதற்காக 'தெகிடி', 'சேதுபதி' போன்ற படங்களில் இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதுபற்றி நிவாஸிடம் கேட்டபோது, ''கும்கி 2 படத்தில் நான் ஒப்பந்தமானது மிகவும் மகிழ்ச்சி. படத்துக்குத் தேவையான ஒரு நேட்டிவிட்டியான பாடலைக் கண்டிப்பாக நான் இந்தப் படத்துக்கு கொடுப்பேன்.

nivas

அதற்கான வேலையைத் தற்போதே ஆரம்பித்துவிட்டேன்'' என்று கூறினார். ஆனால், படத்தில் நடிக்கும் புதுமுகங்கள் இன்னும் தேர்வாகவில்லை. இதுபற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்று இயக்குநர் பிரபு சாலமன் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க