Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பரணியைப் போல ஓவியாவையும் வெளியேற்ற முயல்கிறார்களா? #Biggboss

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஓவியாவுக்கு நெட்டிசன்கள் மத்தியில் ஆதரவு குவிந்துவரும் நிலையில், இன்று ப்ரோமோ வீடியோ ஒன்றை ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது விஜய் டிவி. 

oviya

இன்றைக்கு ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோவில், வீட்டில் உள்ள அனைவரும் ஓவியாவுக்கு எதிராக இருப்பது போலவும் பரணியைப் போலவே ஓவியாவையும் வெளியேற்ற முயல்வது போலவும் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

15 போட்டியாளர்கள், 100 நாள்கள் என ஆரம்பிக்கப்பட்ட பிக் பாஸ் தொடரில், ஏற்கனவே மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். ஸ்ரீ, உடல்நிலையைக் காரணம்காட்டி வெளியேறினார். பரணி, வீட்டில் உள்ளவர்களின் டார்ச்சர் தாங்காமல் சுவர் ஏறிக் குதிக்க முயலவே, அதைக் காரணம்காட்டி அவரை வெளியேற்றினார்கள். இந்நிலையில், ஓவியாவுக்கு எதிராகவும் வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஒன்றுதிரண்டிருக்கிறார்கள். ஆன்லைனில் இந்த ப்ரோமோ வீடியோ வைரலாகிவருகிறது.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியா இதுவரை ஏற்கெனவே இரண்டு முறை ரசிகர்களால் காப்பாற்றப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close