Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிம்புவின் ஆதரவும் ஓவியாவுக்குத்தான்...!

பிக் பாஸ்'தான் தற்போது அரசியல் கட்சித் தலைவர்களும் விவாதிக்கும் விஷயமாக மாறியுள்ளது. கமல், 15 பிரபலங்கள், 100 நாள்கள் என்று பிரமாண்டங்களுக்குப் பஞ்சமில்லாமல் தொடங்கியது, விஜய் டிவி-யின்  'பிக் பாஸ்' நிகழ்ச்சி. அதே நேரத்தில், சர்ச்சைகளுக்கும் குறைவு இல்லை. அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடித்ததால், கமலே செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார்.

ஓவியா


இதனிடையே, பிக் பாஸில் கலந்துகொண்டுள்ள காயத்ரி ரகுராம், அந்த நிகழ்ச்சியில் 'சேரி பிஹேவியர்' என்று கருத்துக் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதனால், அந்த நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பிக் பாஸ் குறித்துதான் பரவலாகப் பேசப்படுகிறது. நிகழ்ச்சிகுறித்து ஏதாவது ஒரு வகையில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றுவருகிறது. 


இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ள மற்றவர்கள், ஒவ்வொரு வாரமும் அவரை வெளியேற்ற வேண்டும் என்று நாமினேட் செய்த போதும், ரசிகர்களின் ஆதரவால் அவர் நிகழ்ச்சியில் தொடர்ந்து வருகிறார். ஓவியாவுக்கு பெருகும் ஆதரவால், வீட்டில் இருக்கும் மற்றவர்கள் அவர் மேல் கடுப்பாவது போல நிகழ்ச்சியில் காட்டப்பட்டு வருகிறது.

சிம்பு


இதனிடையே, இன்றைய எப்பிசோடில் வீட்டில் இருக்கும் மற்றவர்களால், ஓவியா அழுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சமூகவலைதளங்களில் #SaveOviya என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டாக்கப்பட்டது. இந்நிலையில், ஓவியாவுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு கருத்து தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஒருவர் மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக இருந்தால், அவர்களை அவர்களின் போக்கில் தனியாக விட்டுவிட வேண்டும். அதை விட்டுவிட்டு அவரை குறை கூறுவதோ, கார்னர் செய்வதோ கூடாது' என்று கூறியுள்ளார். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement