ஊழலுக்கு எதிராகப் போராடிய அண்ணா ஹஜாரேவைக் கைது செய்து திஹார் சிறையில் வைத்துக்கொண்டு இருந்த நேரத்தில்...

தன் மீதான ஊழல் புகாருக்குப் பதில் சொல்ல நாடாளுமன்ற மாநிலங்கள் அவை வளாகத்துக்குள் முகங்கள் இருண்டு நின்றுகொண்டு இருந்தார் சௌமித்ர சென். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதி யாக இருந்த அவர் மீதான கறையை விசாரிக்கும் படலம்தான் அன்று நடப்பதாக இருந்தது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக மாநிலங்கள் அவையில் தீர்மானம் நிறை வேற்றி, ஒரு நீதிபதி மீதான புகார் உறுதிப்படுத் தப்பட்டது என்றால், அந்த அவமானம் சௌமித்ர சென்னுக்குத்தான் கிடைத்துள்ளது.

'சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்’ என்பதைப்போலத்தான் நீதிபதிகளும். கறை படியாத மனிதர்களும் விலை போகாத மனிதர்களும் அலங்கரிக்க வேண்டிய நீதிபதி பதவி மீது விசாரணை வரை வந்திருப்பது இது இரண்டாவது முறை. 1993-ம் ஆண்டு பஞ்சாப் உயர் நீதிமன்ற நீதிபதி யாக இருந்த ராமசாமி மீது சில முறைகேடுகள் தொடர்பான புகார்கள் சுமத்தப்பட்டன. உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது புகார் சொல்லப்பட்டால், மற்றவர்களைப்போல நடவடிக்கை எடுத்து நீக்கிவிட முடியாது. நாடாளுமன்ற மாநிலங்கள் அவை, மக்கள் அவையில் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அங்கு சம்பந்தப்பட்ட நீதிபதியே வந்து தனது தரப்பு விளக்கத்தைச் சொல்ல வேண்டும். அதன் பிறகு, உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்கு அந்தத் தீர்மானம் விடப்படும். தீர்மானம் நிறைவேறினால் சம்பந்தப்பட்ட நீதிபதி பதவி நீக்கம் செய்யப்படுவார். நீதிபதி ராமசாமி மீது இதே மாதிரி விவாதம் நடந்தது. அவருக்காக வக்கீல் கபில்சிபல் அப்போது வாதாடினார். ஆனால், தீர்மானம் சபையில் தோற்றது. ஆனால், இப்போது சௌமித்ர சென் மீதான தீர்மானம் மாநிலங்கள் அவையில் 17 உறுப்பினர்கள் நீங்கலாக 216 பேரால் ஏற்கப்பட்டது. இதே மாதிரியான தீர்மானம் மக்கள் அவை யிலும் வரும். அங்கும் இதே மாதிரி நடந்தால் சௌமித்ர சென் பதவி விலகத்தான் வேண்டும்!

சௌமித்ர சென் நல்லவரா... கெட்டவரா என்ற விவாதம் முடிந்து வரட்டும். ஆனால், இதில் இன்னொரு விஷயம் கவனிக்கத்தக்கது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனை அதிகமாக விமர்சித்து சபையில் பேசினார் சௌமித்ர சென். இதுதான் அதிக அதிர்ச்சி தரத்தக்கதாக உள்ளது.

தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராக இருக்கிறார் கே.ஜி.பாலகிருஷ்ணன்.

மக்கள் கண்காணிப்பகம் தலைவர் ஹென்றி டிஃபேன், ''ராஜ்ய சபாவில் நீதிபதிக்கு எதிராக முதல்முறையாகக் கொண்டுவரப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் என்பதை ஒப்புக்கொள்ளும் அதே நேரத்தில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் மீது குற்றம்சாட்டப்படுவதும் இதுவே முதல்முறை. இப்போது பாலகிருஷ்ணன் பதவி வகிக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம், ராஜ்ய சபாவின் கட்டுப்பாட்டில்தானே வருகிறது? அப்படி என்றால், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகவும் இதேபோல விசாரிக்கப்பட வேண்டும்தானே?'' என்று கேட்கிறார்.

இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்து பேசிய மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி முதல் வழிமொழிந்து பேசிய தி.மு.க -வைச் சேர்ந்த திருச்சி சிவா வரை அனைவ ருமே சொன்னது, ''இப்படி ஒரு தீர்மானத் தைக் கொண்டுவருவது நீதித் துறையைப்பற்றி அல்ல. ஒரு தனிப்பட்ட நீதிபதியைப்பற்றித்தான்'' என்று அழுத்தமாகச் சொன்னார்கள்.

சௌமித்ர சென் பற்றி மக்களவை என்ன முடிவு எடுக்கும் என்பது தெரியாது. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் நீதித் துறையைச் சுத்தப்படுத்த நிச்சயம் பயன்படும்!