Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தானா சேர்ந்த கூட்டம்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று நள்ளிரவு 12 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக்

விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. 'போடா போடி', 'நானும் ரவுடிதான்' படங்களைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் மூன்றாவது படம் இது. சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தவிர, ரம்யா கிருஷ்ணன், சரண்யா, கோவை சரளா, கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமையா மற்றும் சத்யன் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்து வருகிறது. இப்படத்துக்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்தான் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சூர்யா இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட நாள்களுக்குப் பிறகு செந்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார்

அனிருத் இசையமைத்துவரும் இப்படத்துக்கு ஒளிப்பதிவு தினேஷ் கிருஷ்ணாவும், படத்தொகுப்பை ஶ்ரீகர் பிரசாத்தும் கவனித்து வருகிறார்கள்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close