வெளியிடப்பட்ட நேரம்: 14:18 (24/07/2017)

கடைசி தொடர்பு:07:06 (25/07/2017)

கணேஷ் வெங்கட்ராமைக் கவனித்தீர்களா?! - கலகலக்கும் நடிகர் கருணாகரன்

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வேலையில் தீவிரமாக இருக்கிறார்கள் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். பங்கேற்பாளர்களுக்குள் நடக்கும் சண்டைகள் அனைத்தும், நிஜமா, நாடகமா என்ற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் வலம் வருகிறது. ' நிகழ்ச்சியில் கணேஷ் வெங்கட்ராமை கவனியுங்கள். எவ்வளவு சண்டை நடந்தாலும் தியானம் செய்யும் மனநிலையில் அவர் இருப்பார்' எனக் கலகலக்கிறார் நடிகர் கருணாகரன். 

karunakaran

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் ஸ்ரீ, பரணி, கஞ்சா கருப்பு, ஹார்த்தி கணேஷ், அனுயாவைத் தொடர்ந்து, நமீதாவும் வெளியேற்றப்பட்டுவிட்டார். அடுத்து யார் எலிமினேட் ஆவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 'ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஓவியாவை வெளியேற்றிவிடுவார்கள்' என சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், நமீதாவின் எலிமினேஷனை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஓவியாவுக்கான ஆதரவு அலையும் பெருகிவருகிறது. அறிவிப்பு வந்த நாளிலிருந்தே நிகழ்ச்சி பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. சின்னத்திரையில் முதன்முறையாக நடிகர் கமல் தொகுத்து வழங்குவதால், நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. பிக் பாஸில் பங்கேற்ற பதினைந்து பிரபலங்களில், இதுவரை ஆறு பிரபலங்கள் வெளியேறியிருக்கிறார்கள். ' மீதமிருக்கும் ஒன்பது பிரபலங்களில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போகிறார்' என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. 

காமெடி நடிகர் கருணாகரனிடம் பேசினோம். " பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பம் முதலே பார்த்து வருகிறேன். முதலில் இந்த நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட்டாக இருக்கும் என்று நினைத்தேன். பின்பு போகப்போகத்தான் தெரிந்தது, இது கண்டிப்பாக ஸ்க்ரிப்ட்டாக இருக்காது என்று. பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலரை எனக்குத் தெரியும். அதில் ஓவியாவை எனக்கு நன்றாகவே தெரியும். அவருடைய கேரக்டர் பற்றி மக்களுக்கு இப்போதுதான் தெரிகிறது. அவர் ரொம்ப ஜாலியான பொண்ணு. எல்லோரிடமும் எந்தப் பாகுபாடும் பார்க்காமல் ஒரே மாதிரி பழகக் கூடியவர். ஒருநாள் ஆபீஸில் வேலைபார்க்கும் ஒரு பையன் ஓவியாகூட சேர்ந்து போட்டோ எடுக்க வேண்டும் என வந்து கேட்டான். உடனே, அந்தப் பையனைக் கேரவனுக்குள் வரவழைத்துப் படம் எடுத்துக்கொண்டார் ஓவியா. வாழ்க்கையில் பெரிதாக எதுவும் கிடையாது என நினைத்துக்கொண்டு வாழ்கிறவர் அவர். 

'எனக்குன்னு யார் இருக்கா. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு' சொல்லிட்டு இருந்தார். என்னுடைய நண்பர்கள் ஓவியாவைத்தான் சப்போர்ட் செய்கிறார்கள். ஆனா, பிக் பாஸ் பார்க்கும்போது, கணேஷ் வெங்கட்ராமின் செயல்களைக் கவனிக்கிறேன். யார் சண்டை போட்டாலும், கணேஷ் வெங்கட்ராம் மட்டும் தியானம் பண்ணிக்கிட்டு இருப்பார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருக்கும் மனிதர் அவர். 'தீயா வேலை செய்யணும் குமாரு' படத்தில் அவர்கூட வேலை பார்த்திருக்கேன். முதல் பெஞ்சில் உட்கார்ந்துள்ள பையன் மாதிரி, எதையாவது படித்துக்கொண்டே இருப்பார். ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனிதர் அவர். ஆனால், என்னால், பிக் பாஸ் போன்ற ஒரு வீட்டுக்குள் மூன்று நாள்கூட இருக்க முடியாது" என்றார் கலகலப்புடன். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க