புதுப் படத்துக்காக எருமைப் பால் குடிக்கும் விஜய் சேதுபதி!- ரகசியம் சொல்லும் இயக்குநர் | Vijay Sethupathi's going to drink buffalo milk in his next movie, says the film's director

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (24/07/2017)

கடைசி தொடர்பு:18:50 (24/07/2017)

புதுப் படத்துக்காக எருமைப் பால் குடிக்கும் விஜய் சேதுபதி!- ரகசியம் சொல்லும் இயக்குநர்

விஜய் சேதுபதி நடிப்பில் 'விக்ரம் வேதா' திரைப்படம் வெளியாகி ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இவரது எதார்த்தமான நடிப்பால் இவரது கால்ஷீட் டைரியும் ஹவுஸ் ஃபுல்லாகத்தான் இருக்கிறது. 'புரியாத புதிர்', 'ஒரு நல்லநாள்  பாத்து  சொல்றேன்', 'சீதக்காதி', 'அநீதி கதைகள்', '96'  என இவரது நடிப்பில் பல படங்கள் ரிலீஸுக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன.

vijay sethupathi

தனது முதல் படத்திலேயே விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் என இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' இயக்குநர் ஆறுமுகமிடம் படம் பற்றிய சுவாரஸ்யத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள பேசினோம்.

''ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' ஸ்க்ரிப்ட் எழுதி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு தற்போதுதான் கிடைத்தது. இதில் 'எமன்' என்னும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். படத்தில் மொத்தம் எட்டு கெட்டப்பில் விஜய் சேதுபதியை எல்லோரும் எதிர்பார்க்கலாம். படம் அவரிடம் தொடங்கி அவருடன்தான் முடியும். படம் முழுக்க காமெடிக்குப் பஞ்சம் இருக்காது. பக்கா என்டர்டெயின்மென்ட் படம் இது. காமெடி ப்ளஸ் அட்வென்சர்தான் இந்தப் படத்தின் ஜானர்.  இதில் பழங்குடியினர் தலைவராக வருவார் விஜய் சேதுபதி. இதற்காக ஊட்டியைச் சுற்றியுள்ள பழங்குடியினர் பலரை ஃபாலோ பண்ணினேன். அவர்களின் வாழ்க்கை முழுவதையும் நான் முதலில் கற்றுக்கொண்டேன். சென்னை மற்றும் காட்டுப்பகுதிகளில் படத்துக்கான காட்சிகள் எடுத்திருக்கிறோம். 

கெளதம் கார்த்திக்கிற்கும் படத்தில் நல்ல ஸ்கோப் இருக்கும். அவர், காலேஜ் பையனாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். வில்லேஜ் பக்கமே போகாத ஒரு பையன், முழுக்க சிட்டி பக்கமே வராத ஒரு பையன், இவர்கள் இரண்டு பேரும் சந்திக்கும் சீன்கள் எல்லாம் நன்றாக இருக்கும். இந்தப் படத்தில் வரும் ஒவ்வொரு கேரக்டரும் காரணத்துடன்தான் படத்தில் வருவாங்க. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்து இருக்குற மாதிரி வேற எந்தப் படத்துக்கும் இசையமைத்து இருக்க மாட்டார்'' என்றவரிடம்,

படத்தோட பெயர் போஸ்டரில் வரும் எருமை மாட்டுக் கொம்பு என்னப் படத்துக்கான குறியீடா? என்றால், ``பழக்குடியினர் எருமை மாட்டை உயர்வாகப் பார்ப்பார்கள் இன்னும் எருமை மாட்டுப் பாலைக் கறந்து பால் விற்கும் பழங்குடியினர் இருக்கிறார்கள். பழங்குடியினர் பயன்படுத்திய அணிகலன்களை போஸ்டரில் பார்க்கலாம். படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னும் அதிகமாகப் படத்தைப் பற்றி பேசும்'' எனக்கூறினார் இயக்குநர் ஆறுமுக குமார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close