Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விருதுக்காக நான்கு மணி நேரம் டப்பிங் பேசிய ஸ்ரேயா ரெட்டி!

ஒன்பது ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ''அண்டாவ காணோம்' படத்தின் மூலம் நடிக்க வந்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும், இவரது நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கின்றன. இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 'சில சமயங்களில் ' படத்திலும் நடித்திருக்கிறார் ஸ்ரேயா ரெட்டி. 

''ஏற்கெனவே பிரியதர்ஷன் இயக்கத்தில் 'காஞ்சிவரம்' படத்தில் நடித்திருப்பதால் எனக்கு ஒன்பது ஆண்டு காலம் கழித்து கேமரா முன்பு நிற்கும் ஒரு பதற்றமே இந்தப் படத்தில் இல்லை. பிரியதர்ஷன் கூட இருப்பது எனக்கு ஒரு அப்பாவுடன் இருக்கும் ஒரு ஃபீல்தான் கொடுத்தது. எனக்குப் படத்தில் ஸ்கோர் அதிகமா இல்லை பிரகாஷ்ராஜூக்கு அதிகமா என்று பிரியதர்ஷனிடம் கேட்டுக்கொண்டிருப்பேன். படத்தில் நடித்ததைவிட டப்பிங்கில்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன்'' என்று நம்மிடம் படம் பற்றி சொன்ன ஸ்ரேயா ரெட்டியிடம் டப்பிங் அனுபவம் பற்றிக் கேட்டால்,

எனக்கு `நல்ல படங்களில் நடித்தும் விருது கிடைக்கவில்லையே’ என்று ஆதங்கம் இருந்தது. இதுபற்றி இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஏ.எல்.விஜயிடம் கூறினேன். நீங்கள், உங்கள் குரலில் டப்பிங் கொடுங்கள் அப்போதுதான் உங்களுக்கு விருது கிடைக்கும் என்று டப்பிங்கில் நான்கு மணிநேரம் என்னுடன் இருந்து பேசவைத்தார்'' என்றார் ஸ்ரேயா ரெட்டி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close