வெளியிடப்பட்ட நேரம்: 23:51 (25/07/2017)

கடைசி தொடர்பு:07:51 (26/07/2017)

வைரலாகும் துல்கரின் ஜெமினி கணேசன் கெட்டப்!

தெலுங்கில் 'எவடே சுப்ரமணியம்' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வருகிறது 'மகாநதி' திரைப்படம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என ட்ரைலிங்குவலாக உருவாகும் இப்படம் நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. 

துல்கர்

இந்தப் படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதில் ஜெமினி கணேசனாக நடிக்கிறார் துல்கர் சல்மான். தற்போது பிஜோய் நம்பியார் இயக்கத்தில் தமிழ், மலையாளம் பைலிங்குவலாக உருவாகியிருக்கும் 'சோலோ' படத்தில் நடித்துமுடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து மகாநதி படத்தில் தீவிரமாக நடித்துவருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்வில், துல்கர் ஜெமினி கணேசன் கெட்டப்பிலேயே வர, அங்கு எடுக்கப்பட்டிருக்கிறது இந்த புகைப்படங்கள். அதை தன் முகநூல் பக்கத்தில் பதிவிட, அவை வைரலாகி வருகின்றன. இப்படத்தில் நடிகை சமந்தாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இப்படத்தின் பெயர் 'நடிகையர் திலகம்' என்று வைக்கப்பட்டிருக்கிறது.