Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேடம் துஸாட்ஸில் இடம் பெறப்போகும் மதுபாலாவின் மெழுகுச்சிலை!

பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்புக்காக புகழ்பெற்றவர், மறைந்த நடிகை மதுபாலா. இவரின் பல படங்கள் ரசிகர்களால் இன்றும் போற்றப்படுகிறது. 

மதுபாலா

இவரின் மெழுகுச்சிலை, விரைவில் டெல்லியில் திறக்கப்பட உள்ள மேடம் துஸாட்ஸில் இடம்பெற உள்ளது. 1960ல் வெளியான 'முஹல் ஈ அஸாம்' படத்தில் இவர் நடித்த அனார்கலி கதாபாத்திரம் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது. அந்த கதாபாத்திரத்தின் உருவத்தில்தான் இவரின் மெழுகுச்சிலை உருவாக்கப்பட்டு இடம்பெறப்போகிறது. "மதுபாலாவின் மெழுகுச்சிலையை மேடம் துஸாட்ஸில் இடம்பெறச் செய்வது பெருமையாக இருக்கிறது. இன்றும் ரசிகர்களால் அவர் போற்றப்படுகிறார். இந்தத் தலைமுறையினருக்கு, அந்த அழகியின் பெருமையைக் கடத்துவது மிகவும் மகிழ்சியளிக்கிறது" என்கிறார், மேடம் துஸாட்ஸை நிர்வகிக்கும் மெர்லின் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பொதுமேலாளர் அன்சுல் ஜெய்ன். மேடம் துஸாட்ஸ் என்பது மெழுகுச் சிலை கண்காட்சிக் கூடமாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் இதன் அருங்காட்சியகங்கள் திறக்கப்பட்டுவருகின்றன. விரைவில், புதுடெல்லியில் மேடம் துஸாட்ஸ் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது..

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close