வெளியிடப்பட்ட நேரம்: 11:43 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:08 (27/07/2017)

"ஓவியா ரொம்ப ஃபேமஸ் ஆயிட்டாங்க!" - நெகிழும் நடிகர் விமல்

பார்வையாளர்களைக் கவரும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை வடிவமைத்து வருகிறார்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். 'ஓவியாவின் செயல்கள், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன. மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது' என்கிறார் நடிகர் விமல். 

kalavaani

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இதுவரை, நடிகர்கள் ஸ்ரீ, கஞ்சா கருப்பு, பரணி மற்றும்   நடிகைகளில் அனுயா,ஆர்த்தி, நமீதா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மீதமுள்ள  ஒன்பது பேரில் 'பிக் பாஸ் டைட்டிலை வெல்லப் போவது யார்?' என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நிகழ்ச்சியை விறுவிறுப்பாகக் கொண்டுசெல்லும் வகையில், புதிய யுக்திகளைக் கையாண்டுவருகிறார்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள். அதிலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் செயல்பாடுகள், திரையுலகினர் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஓவியாவின் நண்பர் நடிகர் விமலிடம் பேசினோம். '' இப்போதுகூட படப்பிடிப்புக்காக குற்றாலம் வந்திருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம், ' ஓவியாவுடன் படத்தில் நடித்திருக்கிறீர்களா' என்று கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் ஓவியா மயமாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என்றெல்லாம் சிலர் பேசினார்கள். ஆனால், அது கண்டிப்பாக ஸ்கிரிப்ட் இல்லை. ஏனென்றால், ஓவியாவைப் பார்க்கும்போதே தெரிகிறது. அவர் ரியல் லைஃபில் எப்படி இருப்பாரோ, அப்படித்தான் பிக் பாஸ் வீட்டிலும் இருக்கிறார். நிகழ்ச்சியை நேரம் கிடைக்கும்போதெல்லாம் பார்ப்பேன். நான் இதுவரை ஓவியாவுக்கு ஓட்டு போட்டது இல்லை. படப்பிடிப்பில் உடன்  நடிக்கும் மற்ற நடிகர்கள்கூட, 'ஓவியா எவ்வளவு ஃபேமஸ் ஆகிட்டாங்க’ என்று அவரைப் பற்றித்தான் பேசுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் ஓவியா நல்ல பெயர் எடுத்துவிட்டார். அவரைப் பற்றி பலரும் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது" என நெகிழ்ந்தார் நடிகர் விமல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க