“கணேஷ் பத்தி இப்போ பேச வேண்டாமே..!” - கணேஷ் வெங்கட்ராம் மனைவி நிஷா

மற்றவர்கள் மனம் புண்படாமல் நடப்பது, பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் ஹேண்டில் செய்யும் விதத்தால் மற்றவர்களிடமிருந்து கணேஷ் தனித்துக் காணப்படுகிறார். மற்றவர்களிடம் ஆறுதலாக நடந்துகொள்ளும் விதம், மற்றவர்களின் பிரச்னைகளைக் காதுகொடுத்துக் கேட்பது, அதைச் சமாளிப்பது, தன் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது எனப் பல விஷயங்களில் மற்றவர்களை இம்ப்ரஸ் செய்ததால்தான், எலிமினேஷனிலிருந்து கணேஷ் காப்பாற்றப்பட்டிருக்கிறார். இருப்பினும் உணவு விஷயத்தில் கணேஷ், பகிர்ந்து உண்பதில்லை என்று வையாபுரி உள்ளிட்டவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

நிஷா கிருஷ்ணன்

இந்த நிலையில் தன் காதல் கணவரின் குணநலங்கள் குறித்தும் உணவுப் பிரச்னைகள் குறித்தும் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா கிருஷ்ணனிடம் கேட்டோம். பலமுறை தொடர்புகொண்டபோதும் அவர் பதிலளிக்கத் தயாராக இல்லை. ''அது பற்றி இப்போதைக்குப் பேச வேண்டாமே'' என மென்மையாக மறுத்தார்.

கணேஷ் வெங்கட்ராம்

''உங்கள் கணவரை பலரும் ஜெனியூன்... (நேர்மையானவர், மதிப்பளிப்பவர்) எனப் பாராட்டுகிறார்களே...'' என்றதற்கு, ''ஒரு மனைவியாக எனக்கு சந்தோஷமே. கணவர் பாராட்டு வாங்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. ஆனா, இதுக்கு மேல கணேஷ் பத்தி இப்போதைக்கு பேச வேண்டாமே ப்ளீஸ்'' என முடித்துக்கொண்டார், நிஷா கிருஷ்ணன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!