வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (26/07/2017)

கடைசி தொடர்பு:19:05 (26/07/2017)

ஜெயம் ரவியின் அடுத்த ஆக்‌ஷன் த்ரில்லர்..!

jayam ravi

வன மகன் படத்துக்குப் பிறகு, டிக் டிக் டிக் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருக்கிறார் ஜெயம் ரவி. 'இயக்குநர் அகமது இயக்கத்தில் அதிரடியான த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார் ஜெயம் ரவி. அதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்கிவிட்டன' என்கின்றனர் திரைத்துறை வட்டாரத்தில். இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகவுள்ள 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் ஜெயம் ரவி. ஆனால், 'படப்பிடிப்பு எப்போது தொடங்கும்' என்ற கேள்விக்கு இதுவரையில் பதில் இல்லை. எனவே, இடைப்பட்ட காலகட்டத்தில் இயக்குநர் அகமது இயக்கும் புதிய படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார் ஜெயம் ரவி. வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் என இயக்கிய மூன்று படங்களிலும் வித்தியாசமான கதைக்களத்தை திரையில் கொண்டு வந்தவர் அகமது. அடுத்ததாக, ஆக்‌ஷனுடன் கூடிய அதிரடியான த்ரில்லர் கதை ஒன்றை ஜெயம் ரவியிடம் கூறியுள்ளார். இந்தக் கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. விரைவில் இந்தப் படம் தொடங்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என்கின்றனர் படக்குழுவினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க