வெளியிடப்பட்ட நேரம்: 18:52 (26/07/2017)

கடைசி தொடர்பு:18:52 (26/07/2017)

''டிராஃபிக் ராமசாமியாக நடிகர் விஜய்யின் தந்தை!''

இயக்குநரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார். கிரீன் சிக்னல் பட நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை விஜய் விக்ரம் இயக்குகிறார். 

விஜய் விக்ரம், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். இவர் ஏற்கெனவே எஸ்.ஏ.சந்திரசேகரனை வைத்து 'மார்க்' என்னும் குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சியாகயிருக்கிறது என்றும், பொதுமக்கள் நலனுக்காக ஆயிரத்துக்கும் அதிகமான பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தவர் டிராஃபிக் ராமசாமி. இவரது பொதுநல வழக்குகளால் மக்களுக்கு பல்வேறு நன்மைகள் நிகழ்ந்துள்ளது. யாருடைய மிரட்டலுக்கும் அடிபணியாமல் இருப்பவர் டிராஃபிக் ராமசாமி. கொலை மிரட்டல் வந்தும்கூட இத்தனை வயது ஆனபோதும் போராடிக்கொண்டிருக்கும் டிராஃபிக் ராமசாமியின் போராட்ட குணம் எனக்குப் பிடிக்கும்'' என்று கூறினார் எஸ்.ஏ.சந்திரசேகர். 

மேலும், 'இந்தப் படம் திரைக்கும் வரும்போது சமூகத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக' இயக்குநர் விஜய் விக்ரம் கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க