அனுஷ்கா பாணியில் 'யோகா’ செய்கிறார் சினேகா. அதுதான் அம்மணியின் சமீப ஸ்லிம் தரிசனத்துக் குக் காரணமாம். அதோடு, சினேகா விளம்பரப் படங்களில் பரபர பிஸி. ஆனால், தமிழ்நாட்டில் அல்ல; தமிழர் வாழ் வெளிநாடுகளில் சினேகா நடிக்கும் விளம்பரங்களுக்கு இப்போது ஏக ரெஸ்பான்ஸாம். எடுத்துக்கோ... எடுத்துக்கோ... வால் மார்ட்டில் எடுத்துக்கோ!

அறிமுக இயக்குநர் என்று சொல்லி காஜல் அகர்வாலைச் சந்தித்திருக்கிறார் ஒருவர். கதையைச் சொல்லிவிட்டு, பிரபல தயாரிப்பாளர் கொடுத்ததாகச் சொல்லி, அட்வான்ஸாக மூன்று லட்ச ரூபாய் செக்கையும் கொடுத்திருக்கிறார். வங்கியில் செக்கும் க்ளியர் ஆகிவிட்டது. ஆனால், மேற்கொண்டு தகவல் எதுவும் இல்லையே என்று காஜல் அந்தத் தயாரிப்பாளரிடம் விசாரித்தபோதுதான், 'இயக்குநர்’ போர்வையில் வந்தவர் காஜலின் ரசிகர் என்பது தெரிந்திருக்கிறது. அந்த ரசிகர் மனசுல ஜல் ஜல்லுனு நின்னுட்டீங்க காஜல்!

காதலில் விழுந்திருந்தபோது ரன்பீர் கபூரின் நினைவாக 'ஆர்.கே’ எனக் கழுத்தின் பின் பகுதியில் டாட்டூ குத்தி இருந்தார் தீபிகா படுகோன். காதல் முறிந்த பின்னும் டாட்டூவை எடுக்கவில்லை. 'எப்போதும் இந்த டாட்டூவை அழிக்க மாட்டேன்’ என்று அப்போது ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தார். ஆனால், என்ன நினைத்தாரோ, இப்போது ஆபரே ஷன் மூலம் டாட்டூவை அகற்றி விட்டார். அடுத்த காதல்... அடுத்த டாட்டூ!

விதவிதமான மொழிகளைக் கற்றுக்கொள்வது அசினுக்குப் பிடித்த விஷயம். பிரெஞ்சு, ஸ்பானிஷ் மொழிகளைப் பேச, எழுதத் தெரியும் அசினுக்கு. தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு என நான்கு மொழிப் படங்களிலுமே சொந்தக் குரலிலேயே டப்பிங் பேசுவது அசின் கண்டிப்பாகக் கடைபிடிக்கும் பழக்கம். எல்லாம் சரி... காதல் மொழி கத்துக்கிட்டீங்களா அசின்?

இங்கிலாந்து அரண்மனைக்குள் அடியெடுத்து வைக்க இருக்கும் அடுத்த இளவரசி ஃப்ளாரன்ஸ் ப்ரூஸ்! இளவரசர் ஹாரியின் காதலியான ஃப்ளாரன்ஸ்தான் தற்போது இங்கிலாந்தின் டாப் செலிபிரிட்டி. ஆனால், ப்ரூஸ் சமீபத்தில் உள்ளாடை விளம்பரத்தில் நடிக்க, அம்மணியின் இமேஜ் ஏகத்துக்கும் டேமேஜ். பப்ளிசிட்டி பப்பாளி!

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய பின் யாருடனும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார் சூப்பர் ஸ்டார். கடந்த வாரம் ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்த 'ராணா’ படப்பாடல்களைக் கேட்டு, அவருக்கு போன் செய்து புகழ்ந்து இருக்கிறார் ரஜினி. 'ஷூட்டிங் ஆரம்பித்ததுமே ஐந்து பாடல்களையும் படமாக்கி விட வேண்டும்’ என்று கே.எஸ்.ரவிக்குமாரிடம்சொல்லி இருக்கிறார் ரஜினி. ரா... ரா... ராணா!

மல்யுத்தத்தில் டி-ஷர்ட்டைக் கிழித்தே பிரபலமான ஹல்க் ஹோகனை நினைவு இருக்கிறதா? ஹல்க் ஹோகனின் மகள் புரூக். இப்போது பரபர பப்ளிசிட்டியில் அப்பாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டார். 'விலங்குகளைக் கொல்லக் கூடாது’ என்கிற விழிப்பு உணர்வு பிரசாரத்துக்காக டாப்லெஸ் போஸ் கொடுத்திருக்கிறார் புரூக். பிறந்த ஊர்ல பிறந்தமேனியா இருந்தா என்ன தப்பு?

உலகின் இரண்டாம் நிலை டென்னிஸ் வீராங்கனை கிம் கிளிஸ்டர்ஸ், அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியோடு டென்னிஸுக்கு குட் பை சொல்லவிருக்கிறார். ''எனக்கு 28 வயதாகிவிட்டது. ஒரு பொறுப்பான அம்மாவாக, மனைவியாக நான் மாற வேண்டிய நேரம் இது!'' என்பது கிம்மின் ஸ்டேட்மென்ட். அன்புள்ள அம்மா!

'விஸ்வரூபம்’ டேக் ஆஃப் ஆகாமல் இழுத்துக்கொண்டே செல்வதால், அடுத்த புராஜெக்ட்டுக்குத் தாவிவிட்டார் கமல். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'நண்பர்களும் 40 திருடர்களும்’ என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். 'வெற்றி விழா’, 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படங்களை அடுத்து கமலோடு இணைந்து நடிக்க இருக்கிறார் பிரபு. வசூலை அள்ளுங்க!

ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா ஜோடிதான் இப்போது இந்திய பேட்மிட்டனின் வெற்றிக் கூட்டணி. லண்டனில் நடைபெற்ற உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் தட்டியிருக்கிறார்கள் இந்தப் பெண்கள். ஆனாலும், 'உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வென்றாலும் எங்களுக்கு ஸ்பான்சர்கள் வர மாட்டார்கள்’ என்று வேதனை தெரிவித்து இருக்கிறார் ஜுவாலா கட்டா. இந்திய கிரிக்கெட் டீம் இப்படியே விளையாடினா, சீக்கிரம் ஸ்பான்சர்ஸ் வந்திருவாங்க மேடம்!

'பாடிகார்ட்’ படத்தின் மியூஸிக் ஆல்பத்தைத் தனது நிஜ பாடிகார்டை வைத்து ரிலீஸ் செய்தார் சல்மான் கான். அந்த ஐடியா பிடித்தோ என்னவோ அமிதாப் பச்சன், அமீர் கான், இம்ரான் கான், ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலிகான், அக்ஷய் குமார் என பாலிவுட் டாப் ஸ்டார்களின் பாடிகார்டுகளுக்கு பிரைவேட் பார்ட்டி கொடுக்க இருக்கிறார் கரீனா கபூர். இதுல எதுவும் உள்குத்து இல்லையே!