''தயவுசெய்து பொறுமையாக இருங்கள்!'' - சிம்பு திடீர் வேண்டுகோள்

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'  திரைப்படத்தில் நடித்தார். மூன்று கதாபாத்திரத்திரங்களில் சிம்பு நடித்த இந்தத் திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ரிலீஸானது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களின் வெறுப்பை மட்டுமே சம்பாதித்தது.  

சிம்பு

இரண்டு பாகமாக இந்தப் படத்தை உருவாக்க முதலில் திட்டமிட்டிருந்தனர். படத்தின் முதல் பாகம் வெளியாகித் தோல்வி அடைந்ததால் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் ''நான் நினைத்த மாதிரி இந்தப் படம் எடுத்திருந்தால் படம் வெற்றியடைந்திருக்கும்'' என்று நமது பேட்டியில் சொன்னார்.

மேலும், இந்தப் படத்துக்குப் பிறகு, சிம்பு தனது கனவு படமான 'கெட்டவன்' படத்தை இயக்கப்போகிறார் என்று சமூக வலைதளங்களில் பேச்சு அடிப்பட்டது.  இதுபற்றி 'கெட்டவன்' படத்தின் தயாரிப்பாளரான தன் தந்தையிடம் ஆலோசனையில் இருக்கிறார் சிம்பு என்ற தகவலும் வந்தது. இதுபற்றி  டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, ''சிம்புவும் நானும் 'கெட்டவன்' படத்தை பற்றி பேசவேயில்லை. சிம்பு தற்போது சிலரிடம் கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்'' என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டி.ஆர்.

இதற்கிடையில் சிம்பு ட்விட்டரில் ஒரு வேண்டுக்கோள் விடுத்துள்ளார். அதில் அவர், ``என்னுடைய அடுத்த புராஜெக்ட் பற்றி சமூக வலைதளங்களில் பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுமையாக காத்திருங்கள்’’ என்று ட்விட் தட்டியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!