நடிகைகளுக்கு பிரபு கொடுத்த கிஃப்ட்..! | Prabhu's gift to heroines..!⁠⁠⁠⁠

வெளியிடப்பட்ட நேரம்: 20:43 (27/07/2017)

கடைசி தொடர்பு:20:43 (27/07/2017)

நடிகைகளுக்கு பிரபு கொடுத்த கிஃப்ட்..!

’இப்படை வெல்லும்' மற்றும் 'துருவ நட்சத்திரம்' படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார்.  எப்போதும் ஜாலியாக இருப்பவர் ராதிகா சரத்குமார். தமிழ் சினிமாவின் 80-களில் இவர் அறிமுகமாகியிருப்பதால் எப்போதும் 80-களின் நடிகர்கள் மற்றும் நடிகைகளுடன் தொடர்பில் இருப்பார்.

பிரபு

முக்கியமாக சில ஆண்டுகளுக்காகவே 80-களின் நடிகர், நடிகைகள் அடிக்கடி சந்தித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்தச் சந்திப்புகளை நடிகை சுஹாசினி முன்னிருத்தி வழிநடத்துவார். இந்த ஆண்டுக்கான 80-களின் நடிகர், நடிகைகளின் ரீ யூனியன் இன்னும் நடைபெறவில்லை. இதற்கிடையில் இன்று பூர்ணிமா பாக்யராஜின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகை குஷ்பு, சுஹாசினி, ராதிகா சரத்குமார், ரிஷி மற்றும் நடிகர் பிரபு ஒன்றாக ஒரு ரெஸ்டாரென்ட்டில் சந்தித்துள்ளனர். இந்த நிகழ்வில் நடிகர் பிரபு அனைவருக்கும் ஹெட் போன் ஒன்றை பரிசாகக் கொடுத்துள்ளார். அப்போது எடுத்த போட்டோ ஒன்றை ராதிகா சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.  

இந்த நிகழ்வு பற்றி பூர்ணிமா பாக்யராஜ், ''என் பிறந்த நாளுக்காக சுஹாசினி எல்லோரையும் ஒன்றாக வரவழைத்து இருந்தார். ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்று பகிர்ந்து கொண்டார்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close