Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓவியாவை விரும்பும் நம்மில் எத்தனை பேர் ஓவியா?

ஓவியாவை யார் திட்டினாலும் நமக்குக் கோபம் வருகிறது. இந்தப் பெண்ணைப் போய் திட்டுகிறார்களே என்று ஆத்திரம் வருகிறது. அப்போதே நாம் ஓவியாவைப்போல பொறுமைசாலி இல்லை என்று நிரூபித்து விடுகிறோம். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்லதா கெட்டதா தெரியவில்லை. ஆனால் வேண்டுமா வேண்டாமா என்று கேட்டால்? வேண்டும் என்றே சொல்ல வேண்டும். நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ளும் ஒருவித சோதனைதான் இந்த நிகழ்ச்சி. எல்லோரையும் விட்டு விட்டு தனித்து இருக்கும்போதுதான் நம் உறவுகளை எண்ணி ஏங்குகிறோம் என்பதை வெளிச்சமிடும் தொடர் பிக் பாஸ் என்பதாலே இது அனைவரையும் கவர்ந்து விடுகிறது.

இப்படிதான் இருக்க வேண்டும், இப்படி இருக்க கூடாது என்பதை அறிந்து கொள்ளும் சாதாரணமான நிகழ்ச்சி என்றாலும் நம்மில் பல பேர் திறந்த மனதோடு இல்லை என்பதையே இந்த நிகழ்ச்சி அப்பட்டமாகக் காட்டி விடுகிறது. அதில் பங்கு கொண்டிருக்கும் பலரை விட நாம் மோசமாக புறம் பேசுகிறோம்; அசிங்கமான வார்த்தைகளைப் பேசுகிறோம்; தவறு என்பதை ஒப்புக்கொள்ளாமல் கூட மற்றவர்களை அலட்சியம் செய்கிறோம் என்பது இந்த பிக் பாஸ்  நிகழ்ச்சியால் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகிறது. இதனாலே ஒவ்வொருவரும் ரசித்து சுவாரஸ்யமாக விவாதித்து இந்த நிகழ்ச்சியை பெரிதாக்கி விட்டோம். பக்கத்தில் இருப்பவரைக்கூட மதிக்காமல் செல்போனை நோண்டிக்கொண்டிருக்கும் நமக்கு நன்றி, மன்னியுங்கள் என்ற வார்த்தை எல்லாம் மறந்தே விட்டது. ஆனால் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

பிக் பாஸ்

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி, பெண்ணை சிறிய வார்த்தைகளால் கூட வீழ்த்திவிட முடியும், எதற்கெடுத்தாலும் அழும் கூட்டமே பெண்கள்தான் எனப் பெண்களைக் குறித்த அத்தனை அபத்தமும் இந்த நிகழ்ச்சியில் காட்டப்பட்டாலும் அதுவே பெண்களுக்கு சுவாரஸ்யமாகி நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிடுகிறது. இத்தனை பெண்ணிய தாக்குதலுக்கும் அசந்து விடாமல் ஒற்றை மனுஷியாக சிரித்த முகத்தோடு எதையும் எதிர்நோக்கியதால்தான் ஓவியா வென்று வருகிறார். இதை எத்தனை பெண்கள் கடைப்பிடிப்பார்கள்? பெண்களே வெறுத்துப்போகும் அளவுக்குப் புறணி பேசும் ஆண்களும் உண்டு என்பதை சிநேகனும், சக்தியும் நிரூபிக்கையில் நம்மை நாமே அதில் பார்த்துக் கொள்கிறோமா இல்லையா?

ஓவியா

குப்பையை தொட்டியிலும், குறைகளை சம்பந்தப்பட்டவரிடமும் மட்டும்தான் சொல்லவேண்டும். மற்ற எவரிடம் சொன்னாலும் அது கேவலமான புறணி பேசுவதுதான். நம்மை நாமே சோதித்துக்கொள்ள இந்த நிகழ்ச்சி உதவி செய்கிறது. உறவுகளிடம், நண்பர்களிடம், அலுவலகத்தில் இப்படி எங்கு எங்கு எல்லாம் எவரைப் பற்றியெல்லாம் என்ன பேசியுள்ளோம் என்பதை யோசித்துப் பார்ப்போம். யாருமே நெருங்கிய உறவுகள் இல்லாத சூழலிலும் அருகில் இருப்பவரிடம் அன்பை பகிர்ந்து கொள்வோம் என்பதைத்தான் இந்த பிக் பாஸ்  நிகழ்ச்சி அடிநாதமாகக் கொண்டுள்ளது. அதைப் புரிந்துகொள்ள முயல்வோம். அப்படி யோசித்தால் இந்த நிகழ்ச்சி வெற்றிதான். இல்லை என்றால் .. இந்த நிகழ்ச்சியைப் பற்றியும் 'பேசிவிட்டு' தான் போவோமே! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close