விமலுக்கு ஜோடியாகும் நடிகை வரலட்சுமி! | Varalakshmi is going to pair with vimal

வெளியிடப்பட்ட நேரம்: 14:54 (29/07/2017)

கடைசி தொடர்பு:14:54 (29/07/2017)

விமலுக்கு ஜோடியாகும் நடிகை வரலட்சுமி!

கதைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டரில் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகை வரலட்சுமி. 'விக்ரம் வேதா' போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களிலும்கூட சின்ன ரோல்லாக இருந்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார் நடிகை வரலெட்சுமி.


'நிபுணன்' மற்றும் 'சத்யா' படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் இவர். இதற்காக அதிக படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் உங்கள் அப்பா சரத்குமாரிடம் அட்வைஸ் ஏதாவது கேட்டீர்களா? என்றால், ''நான் யாரிடமும் அட்வைஸ் கேட்கமாட்டேன். நான் ஒரு முடிவு எடுத்தால் சரியாகயிருக்கும். அது என் பெற்றோர்களுக்கும் தெரியும்’’ என்கிறார். 

இந்நிலையில் வரலெட்சுமி ஆர்.கே.சுரேஷூடன் 'வர்கம்' படத்தில் நடிக்கிறார். ஏற்கெனவே இவருடன் 'தாரை தப்பட்டை' படத்தில் தனது மாஸ் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கிடையில், தற்போது இவர் நடிகர் விமலுக்கு ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படமும் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக இருக்குமாம். மேலும், 'சண்டக்கோழி 2' படத்திலும் நடிகர் விஷாலுக்கு இணையாக வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் வரலெட்சுமி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க