’’ஜூலி தான் என் படத்தின் ஹீரோயின்..!’’ - கூல் சுரேஷ் | Julie will be a heroine of my movie, says cool suresh

வெளியிடப்பட்ட நேரம்: 23:12 (28/07/2017)

கடைசி தொடர்பு:14:26 (29/07/2017)

’’ஜூலி தான் என் படத்தின் ஹீரோயின்..!’’ - கூல் சுரேஷ்

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சின்னதும் பெரியதுமாய் பல படங்களில் நடித்தவர் கூல் சுரேஷ். சமீபமாக சந்தானத்தோடு சேர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு பிரபலமான ஜூலி தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இவரை ஹீரோயினாக வைத்து தான் ஒரு படம் எடுக்கப்போவதாகவும், அதில் புதுமுக நடிகர் ஹீரோவாக நடிப்பார் என்றும் சரவணன் என்கிற அறிமுக இயக்குநர் இந்தப் படத்தை இயக்குவார் என்றும் அந்த வீடியோவில் பேசியுள்ளார். ஜூலி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்தவுடன் அவரிடம் கதையைக் கூறி இந்தப் படத்தில் நடிக்க வைப்பேன் என்றும் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.