Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த படம் 'கெட்டவனா'?, சிம்பு ட்விட்டரில் சூசக தகவல்

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் சிம்புவுக்கு சரியாக அமையவில்லை. கடுமையான விமர்சனங்களை சந்தித்த அந்த படத்திற்கு பிறகு சிம்பு நடிக்கும் படம் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. 

simbu

இதற்கிடையில் சிம்பு, முன்னர்  தொடங்காமல் கைவிடப்பட்ட 'கெட்டவன்' படத்தை அவரே இயக்கி நடிப்பார் என்று பேசப்பட்டது.  இது குறித்து ஊடகங்கள் தொடர்ந்து அவரை தொடர்பு கொள்ள, "அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பேன் " ஏன் ட்வீட் தட்டினார். 

இந்நிலையில் , நேற்று நடிகர் சிம்பு தனது அடுத்த படம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதில், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்'. ஏழு முறை விழுந்தாலும் எட்டாவது முறை எழுந்து நில். தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் என குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தை அவரே இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 


பின்னர் ஒரு மணி நேரம் கழித்து, படம் குறித்த மேலும் சில விவரங்களை தெரிவித்தார். அதில் இந்த படத்தில், பாடலோ  இடைவேளையோ இல்லை.  செப்டம்பரில் இந்த படம் வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. யுவன் - சிம்பு கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரசிகர்கள் கெட்டவன் படத்தை தான் வேறு பெயரில், திரைக்கதையில் சிறு மாற்றம் செய்து எடுக்கிறார் என கூறி வருகிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close