Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலையாளத்தில் நடிக்க ஆசைப்படும் விஜய்சேதுபதி!

மாதவன் - விஜய்சேதுபதி இணைந்து நடித்த விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 'மலையாள திரையுலகில் விஜய் சேதுபதிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்' என உற்சாகமாகப் பேசுகிறார் 'விக்ரம் வேதா' படத்தில் 'சேட்டன்' கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஸ் பேரடி.

harish peradi

விக்ரம் வேதா திரைப்படம் மலையாள திரை உலகிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஸ் பேரடியிடம் பேசினோம். "மலையாளத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டுதான் தமிழில் இயக்குநர் மணிகண்டன் 'ஆண்டவன் கட்டளை' படத்தில் அறிமுகப்படுத்தினார். 'விக்ரம் வேதா' திரைப்படம் கேரளாவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் பெரிதும் பாராட்டினார்கள். மலையாள திரையுலகின் பெரிய இயக்குநர்களிடம் இருந்து எனக்குப் போன் கால் வருகிறது.

மலையாளத்தில் விஜய் சேதுபதிக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். நிறைய மலையாள டிவி சேனல்கள், எஃப்.எம்களில் விஜய் சேதுபதி பற்றிய செய்திகள் வருகின்றன. அவரை மலையாளத்தில் நடிக்க வருமாறு நிறைய அழைப்புகள் வந்தன. அவரது கால்ஷீட் பிஸியாக இருப்பதால் அவரால் நடிக்க முடியவில்லை. 'மலையாளத்தில் ஒரு நல்ல படம் பண்ண வேண்டும்' என்ற ஆசையும் அவருக்கு உள்ளது" என்றவர், "விக்ரமுடன் ஸ்கெட் படம், விஜய்யுடன் மெர்சல், மகேஷ் பாபுவுடன் ஸ்பைடர் படம் எனத் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படங்களில் எல்லாம் ஹீரோக்களுடன் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். ஆனால், படத்தில் என்னுடைய கேரக்டர் என்ன என்று யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்றார் உற்சாகத்துடன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement