Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவை மெர்சல் ஆக்கிய 'மெர்சல்' பட பிசினஸ்..!

தமிழ் சினிமாவில் நடித்துவரும் ஹீரோக்களில், கேரள சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர், ரஜினி. அடுத்து, பெரிதும் ரசிகர்களைப் பெற்றிருந்தவர், அர்ஜூன்.  ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'முதல்வன்' திரைப்படம், அர்ஜூனுக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது. ஆந்திராவில், சூர்யா நடிக்கும் படங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதுண்டு. அதுபோல, கேரளாவில் விஜய் நடிக்கும் படங்களுக்கு  எப்போதும் வியாபாரரீதியாக எதிர்பார்ப்பு எகிறும்.  'புலி' படத்துக்கு முன்புவரை விஜய் நடித்த அனைத்து படங்களின் கேரள விநியோக உரிமையையை வெளியிட்டுவந்தவர், 'இருமுகன்' படத்தைத் தயாரித்த சிபு. 'ஜில்லா' படத்தில் விஜய்யுடன்  கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடித்திருந்ததால், அந்தப் படம் பெரும்பால மலையாள மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பின்,  'கலைப்புலி' தாணு தயாரித்து, 'அட்லி' இயக்கத்தில் வெளிவந்த 'தெறி' திரைப்படம்  வசூலை வாரிக்குவித்தது. 

mersal
 

கேரளாவில், நாளுக்கு நாள் விஜய் நடித்து வெளிவரும் படங்களுக்கு செல்வாக்கு அதிகரித்துவருகிறது. கேரளாவில் பெருகிவரும் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்திவருகிறார், விஜய்.  கேரள மக்களிடத்தில் எப்போதும் விஜய் நடிக்கும் படங்களுக்கு கிராக்கி அதிகம்.  இதற்கு முன்புவரை, விஜய் நடித்து வெளிவந்த அத்தனை பட ரெக்கார்டையும் உடைத்து, மலையாள மக்களை மெர்சல் ஆக்கிவிட்டது, 'மெர்சல்' பட வியாபாரம். இப்போது, யாருமே எதிர்பாராத வண்ணம் 6 கோடி ரூபாய் கொடுத்து  குளோபல் யுனைட்டெட் மீடியா நிறுவனம் 'மெர்சல்' படத்தின் கேரள விநியோக உரிமையைப் பெற்றிருக்கிறது. 'கேரளாவில் இதற்கு முன் விஜய்யின் படங்கள் எத்தனையோ ரிலீஸாகியிருக்கின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு, கேரளாவில் இருக்கும் அதிக திரையரங்குகளில் 'மெர்சல்' திரைப்படத்தை ரிலீஸ் செய்யப்போகிறோம்' என்று  'GUM'  அதாவது குளோபல் யுனைடெட் மீடியா நிறுவனத் தலைவர் பிரேம்மேனன் அறிவித்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close