'விவேகம்' படத்தின் தெலுங்கு ரிலீஸ் தள்ளிப்போகிறதா..! | 'Vivegam' telugu release may get delayed

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (31/07/2017)

கடைசி தொடர்பு:17:30 (31/07/2017)

'விவேகம்' படத்தின் தெலுங்கு ரிலீஸ் தள்ளிப்போகிறதா..!

சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடித்து வெளிவந்த 'வேதாளம்' படப்பிடிப்பு, நிறைய நாட்கள் சென்னையில் இருக்கும் பின்னிமில்லில் படமாக்கப்பட்டது. அப்போது, அஜித்தின்  ரசிகர்கள் பலர்  பின்னிமில்லில் காம்பவுண்ட் சுவர்களில் ஏறி நின்று வேடிக்கை பார்த்துள்ளனர். காம்பவுண்ட் சுவர் பக்கத்திலேயே ரயில்வே தண்டவளம் இருப்பதால், அங்கே அடிக்கடி மின்சார ரயில்கள் சென்றவண்ணம் இருந்தன.  தங்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல், காம்பவுண்ட் சுவரில் நின்று ரசிகர்கள் தன்னைப் பார்த்து கை தட்டுவதையும் ஆரவாரம் செய்வதையும் பார்த்து, அஜித் பதைபதைத்துவிட்டார்.

vivegam
 

அதன்பின், அவர்கள் அருகில் சென்று, ஆபத்து நிலையை எடுத்துக்கூறி, அறிவுரை சொல்லி அனுப்பினார். அப்போதே பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் நமது அடுத்த படத்தின் படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்று டைரக்டர் சிவாவிடம் சொன்னார், அஜித்.  அதன்பின்,  அஜித் சொன்னதை மனதில் வைத்தோ என்னவோ, 'விவேகம்' படக்கதையே இன்டர்நேஷனல் க்ரைம் சப்ஜெக்ட்டாக உருவாக்கினார், சிவா. இதற்காக, 'வீரம்', 'வேதாளம்' படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மற்றும் குழுவினரோடு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று, அங்கு படப்பிடிப்பு நடத்தப்படும்  இடங்களை செலக்ட் செய்தனர். அதன்பின், அந்த நாட்டு வழக்கப்படி 'விவேகம்' படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களுக்கான உரிமையை அந்நாட்டு அரசாங்கத்திடம் பெற்ற பின்னரே சென்னைக்குத் திரும்பினர்.  


இதுவரை அஜித் நடித்து வெளிவந்த  படங்களிலேயே  90 சதவிகிதம் படப்பிடிப்பை வெளிநாட்டிலேயே நடத்தி முடித்த திரைப்படம் 'விவேகம்' என்று உறுதியாகக் கூறுகிறார்கள். உலகம் முழுவதும் ஆகஸ்ட்  10-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதே தினத்தில் தெலுங்கு மொழியிலும் டப்பிங் செய்து,  'விவேகம்' திரைப்படத்தை வெளியிட முடிவுசெய்தனர்.  சென்னை ஏ.வி.எம் கார்டனில் இருக்கும் டப்பிங் தியேட்டரில் படத்தின் தெலுங்கு  டப்பிங் பணி நடந்தது. இரவு பகலாக கண்விழித்து 'விவேகம்' தெலுங்கில் வெளியாவதற்கான அனைத்து வேலைகளையும் முடித்து, படத்தைத் தயாராக வைத்துள்ளனர். இந்தச் சூழ்நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி கிருஷ்ணவம்சி இயக்கிய 'நட்சத்திரம்' திரைப்படமும், ராணா நடித்துள்ள 'நேனே ராஜா நேனே மந்திரி' ( தமிழில் : 'நான் ஆணையிட்டால்') படமும் ரிலீஸாகிறது. ஆந்திரா, தெலுங்கானாவில் இருக்கும் பெரும்பாலான சினிமா திரையரங்குகளைத் தங்கள் படங்களை ரிலீஸ் செய்வதற்கு கிருஷ்ணவம்சியும் ராணாவும் ஒப்பந்தம்செய்து வைத்துள்ளனர். ஆகஸ்ட் 10-ம்தேதி அன்று 'விவேகம்' வெளியானால், குறைந்த தியேட்டர்களே கிடைக்கும் சூழ்நிலை நிலவுகிறது. அதனால் அக்கடபூமியில் 'விவேகம்' ரிலீஸ் தள்ளிப்போகும் என்று சொல்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க