மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி | Vijay Sethupathi to act in Mani Ratnam movie

வெளியிடப்பட்ட நேரம்: 18:41 (31/07/2017)

கடைசி தொடர்பு:18:46 (31/07/2017)

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி

'ஒரு கதை சொல்லட்டுமா சார்' என விஜய் சேதுபதி 'விக்ரம் வேதா' படத்தில் தனது அசாத்தியமான நடிப்பால் ரசிகர்களை மிரளவைத்திருப்பார். இவரது படத்துக்கு தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர்கள் வரிசை கட்டி நிற்கும் இந்த நேரத்தில் விஜய் சேதுபதியின் படங்களும் வண்டி கட்டி ரிலீஸுக்காகக் காத்திருக்கின்றன. 

விஜய் சேதுபதி

'கருப்பன்', 'சீதக்காதி', '96', ''ஒரு நல்லநாள் பாத்து  சொல்றேன்', அநீதிக் கதைகள்' உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகின்றன. இதில் 'கருப்பன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில்தான் வெளியானது. இதுதவிர, இவர் சில படங்களில்  கௌரவத் தோற்றமும் செய்திருக்கிறார்.  'அண்டவா காணோம்' படத்தில் அண்டாவுக்கான வாய்ஸ் விஜய்சேதுபதி தான். தன்னோடு சேர்ந்து சினிமா துறையில் தனக்கு வாய்ப்பு கொடுத்தவர்களுக்காகவும் சில படங்களில் இவர் கமிட் ஆகியுள்ளார்.

இதற்கிடையில் 'விக்ரம் வேதா' வெற்றிக்குப் பிறகு, விஜய் சேதுபதிக்குப் பெரிய இயக்குநர்களின் கதையும் தேடி வர ஆரம்பித்திருக்கின்றன.  இயக்குநர் மணிரத்னம் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருப்பதாகத் தகவல் வந்தது. இதுபற்றி விஜய் சேதுபதியின் நெருங்கிய வட்டாரத்திடம் விசாரித்தபோது, 

இந்த வருடம் முழுவதும் விஜய் சேதுபதியின் கால்ஷீட் டைரி ஃபுல், அவர் மணிரத்னம் படத்தில் கமிட்டானது உண்மைதான். தங்களின் புதுப் படத்தைப் பற்றி இருவரும் பேசியுள்ளனர். இதுபற்றிய அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும். 

ஆனால், இவர்களின் இந்தப் புதுபடத்துக்கான படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாகும்'' என்று கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க