வெளியிடப்பட்ட நேரம்: 21:04 (31/07/2017)

கடைசி தொடர்பு:21:04 (31/07/2017)

நெக்ஸ்ட் 'தமிழ்ப் படம் 2.0'! 'ரெண்டாவது படம்' எப்போது?- இயக்குநர் சி.எஸ்.அமுதன்

மிர்ச்சி சிவா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தமிழ்ப் படம்'. இயக்குநர் சி.எஸ்.அமுதன் எடுத்திருந்த இந்தப் படத்தை தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார். இந்தப் படம் காமெடி ரீதியாக ஹிட் அடித்தது. 

தமிழ்ப் படம்

'தமிழ்ப் படம்' வெளியாகி ஏழு ஆண்டுகள் முடிந்திருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்தின் பார்ட்-2 உருவாகவுள்ளது. 'தமிழ்ப் படம் 2.0' என்ற பெயரில் உருவாக இருக்கிற இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க உள்ளார். மேலும், ஹீரோயினாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியுள்ள ஓவியாவை நடிக்க வைக்கலாம் என்று இயக்குநர் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அமுதனிடம் பேசினோம்.

''தமிழ் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கும் முடிவில் இருக்கிறது உண்மைதான். படத்தில் ஓவியாவை நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் உள்ளது. ஆனால், 'பிக் பாஸ்' வீட்டிலிருந்து ஓவியா வந்த பின்புதான் இதுபற்றி பேச முடியும். இப்போது பேசினால் ரொம்ப சீக்கிரமே பேசுவதாக இருக்கும்'' என்றவரிடம் விமலை வைத்து இயக்கிய ’ரெண்டாவது படம்’ பற்றிக் கேட்டால், 

'இயக்குநராக என்னுடைய வேலை, படத்தை இயக்குவது. அதை நான் சரியாகச் செய்து முடித்துவிட்டேன். படம் ரிலீஸாவதில் தாமதம் ஏன் என்று தயாரிப்பாளரைத்தான் கேட்க வேண்டும்'' என்றார் சி.எஸ்.அமுதன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க